twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிவி பிரகாஷுக்கு புதுக் குரல் வேண்டுமாம்.. பாடுங்க.. ரெக்கார்ட் பண்ணி அனுப்பி வைங்க!

    |

    சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் புதிய பாடகர்களைத் தேடி வருகிறார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக பல அவதாரம் பூண்டு பிசியாக இருப்பவர் பிரகாஷ். ஹீரோவாக கலக்கி வரும் அவர் இடை இடையே இசையமைப்புக்கும் போகிறார். சமீபத்தில் கூட அவரது இசையமைப்பில் வந்த விஜய்யின் தெறி மெகா ஹிட்டானது. பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

    இந்த நிலையில் நல்ல குரல் வளம் கொண்டவர்களைத் தேடுவதாக பிரகாஷ் அறிவித்துள்ளார்.

    பிரஷ்ஷான குரல்...

    பிரஷ்ஷான குரல்...

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள அறிவிப்பில், "புதிய பிரஷ்ஷான குரலைத் தேடுகிறேன். உங்களது குரலைப் பதிவு செய்து, இந்தப் பதிவின் கீழே கமெண்ட் பகுதியில் இடம் பெறச் செய்யுங்கள். டீசன்ட்டான பதிவாக இருக்க வேண்டும். பாடகராக பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    வேகமாக அனுப்புங்கள்...

    வேகமாக அனுப்புங்கள்...

    சாதாரணமான பதிவுகளை அனுப்ப வேண்டாம். சிறந்த குரல் நிச்சயம் தேர்வு செய்யப்படும். வேகமாக அனுப்புங்க, இப்போதிருந்தே அனுப்பத் தொடங்குங்க. எல்லோரிடமும் சொல்லுங்க. புதிய குரல்களைத் தேர்வு செய்வோம்" என்று கூறியுள்ளார் பிரகாஷ்.

    குவியும் வீடியோக்கள்...

    குவியும் வீடியோக்கள்...

    ஜி.வி.யின் இந்த அறிவிப்பால் மனம் குளிர்த்த அவரது ரசிகர்கள் தங்களுக்குள் உள்ள பாடும் திறமைகளை தட்டி எழுப்பி, அவரது கமெண்ட் பாக்ஸை வீடியோக்களால் நிறைத்து வருகின்றனர்.

    கல்பனா அக்கா...

    கல்பனா அக்கா...

    அதில் ஒரு குறும்பான ரசிகர், கபாலி புகழ் கல்பனா அக்காவின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். எது எப்படியோ, உங்களுக்கு "வெள்ளிங்கிரி" மாதிரி குரல் வளம் இருக்கா.. அப்படியானால் லேட் பண்ணாம உடனே பதிவு செய்து அனுப்பி வைங்க பாஸ்!.

    English summary
    Music director and actor G.V.Prakash is looking for new voices for his song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X