twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயவு செய்து இந்தப் படத்தை பார்த்து விடாதீர்கள்

    By Manjula
    |

    மும்பை: கடந்த வாரம் வெளியாகி இந்தி திரை உலகில் ஓடிக் கொண்டிருக்கும் கப்பர் இஸ் பேக் திரைப் படத்தை பார்க்கவில்லையா? நல்லது தயவு செய்து பார்த்து விடாதீர்கள் ...

    ஏனேனில் படத்தை சொதப்பு சொதப்பென்று சொதப்பி சொதப்பல் இயக்குனர் என்ற பெயரை தட்டி செல்கிறார் இயக்குனர் கிரீஷ். நம்ம விஜயகாந்தின் நடிப்பில் வெளிவந்த ரமணா படத்தைத் தான் அந்த லட்சணத்தில் எடுத்து இருக்கிறார்கள் .

    2௦௦2ம் ஆண்டில் இயக்குனர் முருகதாசின் இயக்கத்தில் வெளிவந்த ரமணா படம் தீபாவளி அன்று வெளியாகி பொங்கல் வரை ஓடியது. மிகச் சிறந்த இந்த படம் விஜயகாந்தின் அரசியல் ஆசைக்கும் அடித்தளமாக அமைந்தது என்று சொன்னால் அது உண்மையே.

    கப்பர் படத்தின் கதை:

    கப்பர் படத்தின் கதை:

    மும்பையில் திடிரென்று 1௦ தாசில்தார்கள் காணாமல் போகிறார்கள் அவர்களில் ஒருவர் கொல்லப் படுகிறார்.அவர் ஊழல் செய்வதில் முதலிடத்தில் இருப்பதால் கொல்லப் படுகிறார் . இதனை செய்தது யார் என்று காவல் துறை திணறிக் கொண்டிருக்கையில் தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகளை காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டே செய்கிறார் அக்க்ஷய்.இதற்கிடையில் வில்லன் திக் விஜய் படேல் (சுமன்) கப்பரை அழிக்கத் துடிக்கிறார். காவல் துறை ஓட்டுனர் சாது ராம் இந்த கொலைகளை பற்றி ரகசியமாய் விசாரிக்க ஆரம்பிக்க, இறுதியில் வழக்கம் போல சுபம் சுபம் சுபமே.

    அக்க்ஷய்:

    அக்க்ஷய்:

    பகலில் ஆதித்யாவாகவும் இரவில் கப்பராகவும் வரும் அக்க்ஷய் அழகாக இருக்கிறார் நன்றாக நடித்தும் இருக்கிறார். மாறுபட்ட வேடத்திற்கு ஏற்ப நடிப்பில் வித்தியாசம் காட்டி இருப்பது சூப்பர்.

    சுருதி ஹாசன் :

    சுருதி ஹாசன் :

    சுருதி வழக்கம் போல நாயகனை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தை குறைவான நேரத்தில் படத்தில் செய்து இருக்கிறார். வித்யா பாலன், கங்கனா ரனாவத் போன்ற ஹீரோயின்கள் தங்கள் மாறுபட்ட நடிப்பால் தேசிய விருது வாங்கிக் கொண்டு இருக்கும் போது சுருதி இப்படி சும்மா வந்துட்டு போறது நியாயமா? ஒரு வேளை மூன்று மொழிகளிலும் பறந்து பறந்து நடிப்பதால் நேரம் போதவில்லையோ?

    சுமன்:

    சுமன்:

    கப்பரை அழிக்கத் துடிக்கும் வில்லனாக சுமன். சும்ம்மா சும்மா கத்துகிறார். சுமன்னு பேரு வச்சதால சும்மா சும்மா கத்துறிங்களோ?

    ஒளிப்பதிவு :

    ஒளிப்பதிவு :

    நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். மற்றபடி பாடல்களோ பின்னணி இசையோ படத்திற்கு பக்க பலம் சேர்க்கவில்லை.

    சொதப்பிய திரைக் கதை:

    சொதப்பிய திரைக் கதை:

    முன்பாதியில் கடத்தல், கொலை, விசாரணை என வேகமாக நகரும் திரைக்கதை பின்பாதியின் அழுத்தமில்லாத திரைக்கதையால் தடுமாறுகிறது. இதில் நம் உச்சகட்ட பொறுமையை சோதிக்கும் விதமாக வரும் அந்த பிளாஷ்பேக்கும், குத்துப் பாடலும் வடிவேலு பாணியில் சொல்வதென்றால் முடியல...ஒரு மனுஷன் எவ்வளவு சோதனையத் தான் தாங்குறது ?

    கிரீஷ்:

    கிரீஷ்:

    ரமணா படம் வெளிவந்து ஆண்டுகள் 13 ஆகியும் இன்னமும் அந்த படத்தை ஒன்ஸ்மோர் பார்க்கத் தூண்டும்.. அவ்வளவு நல்ல படத்தை இப்படி சொதப்பி இருக்கிறீர்களே கிரீஷ் இது நியாயமா?

    English summary
    Gabbar is back not that much worth to watch. This is the remake of Tamil Ramana
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X