»   »  கெத்து ஆக்ஷன் + பாடல்கள் ரெண்டுமே சூப்பர்... பாராட்டும் ரசிகர்கள்

கெத்து ஆக்ஷன் + பாடல்கள் ரெண்டுமே சூப்பர்... பாராட்டும் ரசிகர்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ் மற்றும் விக்ராந்த் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் கெத்து.

மான் கராத்தே திருக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இதுநாள்வரை காமெடி ஹீரோவாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் மூலம் ஆக்ஷன் பாதைக்குத் திரும்பியிருக்கிறார்.


உதயநிதி ஸ்டாலினின் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.


வாலி இருந்திருந்தால்

"எப்பதாண்டி வரப்போறே வாட்ஸப்லே!நீ வரலேன்னு காலேலேருந்து நா சாப்ட்லே...கவிஞர் வாலி இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்" என்று படத்தின் பாடல் வரிகளை பாராட்டி இருக்கிறார் கருணா.


முதல் பாதி முடிந்தது

கெத்து முதல் பாதி முடிந்தது, ஆக்ஷனை கலந்து கட்டி உதயநிதி நடித்திருக்கிறார். தேவதை போன்று எமி ஜாக்சன் அழகாக நடித்திருக்கிறார். கெத்து கண்டிப்பாக பார்க்கலாம்" என்று அவினாஷ் பதிவிட்டிருக்கிறார்.


விக்ராந்த் என்ட்ரி

"வில்லனாக நடித்திருக்கும் விக்ராந்தின் என்ட்ரி மாஸ்" என்று பாராட்டி இருக்கிறார் கவுசிக்.


முதல் சண்டை

"உதயநிதி ஸ்டாலினின் முதல் சண்டைக் காட்சி உண்மையிலேயே நன்றாக இருக்கிறது" ஷானுவின் பதிவிது.


English summary
Udhayanidhi Stalin, Amy Jackson Starring Gethu Today Released Worldwide - Audience Live Response.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos