»   »  ஓணம் திருநாள்- வலைதளங்களில் வாழ்த்து சொல்லிய நட்சத்திரங்கள்

ஓணம் திருநாள்- வலைதளங்களில் வாழ்த்து சொல்லிய நட்சத்திரங்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இன்று கேரள மாநிலம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.

திரும்பிய இடமெல்லாம் திருவிழாவாக மாறி களை கட்டுகின்றன, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள். கேரள மாநிலத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் எல்லோருமே ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.

23 வகையான பதார்த்தங்கள் மற்றும் இனிப்புகளுடன் களைகட்டும் ஓணம் பண்டிகைக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில், தங்கள் ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் கூறியிருக்கின்றனர் மலையாள நட்சத்திரங்கள்.

ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த நட்சத்திரங்களின் வாழ்த்துக்களை இங்கே பார்க்கலாம்...

கோலம் போட்டு ஓணம் கொண்டாடும் நிக்கி கல்ராணி

டார்லிங் படப்புகழ் நிக்கி கல்ராணி ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலம் போட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்

அழகான கோலத்துடன் மஞ்சு வாரியரின் ஓணம்

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது வீட்டிற்கு முன்பு மெகா சைஸ் அத்தப்பூ கோலத்தைப் போட்டு ஓணத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார். தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை தாய்மொழியில் சொல்லியிருக்கிறார் மஞ்சு வாரியர்.

குடும்பத்துடன் ஓணம் கொண்டாடும் சுரேஷ் கோபி

மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி தனது ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை கூறி கோலத்திற்கு முன்பாக தான் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தாய்மொழியில் வாழ்த்துத் தெரிவித்த சூப்பர்ஸ்டார்

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தனது கைப்பட ஓணம் வாழ்த்துக்கள் எழுதிய கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

மம்முட்டி

மற்றொரு சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் மம்முட்டி ஓணம் வாழ்த்துக்களை தானே பேசி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நேரம் நாயகனின் ஓணம் வாழ்த்து

நேரம் நாயகன் நிவின் பாலி தனது பேஸ்புக் பக்கத்தில் ஓணம் வாழ்த்துக்களை மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் தெரிவித்திருக்கிறார்.

இதைப் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் தங்கள் ஓணம் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

வாசகர்கள் அனைவருக்கும் தட்ஸ்தமிழின் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்....

 

English summary
Onam 2015, Celebrities Wished Their Fans on the Auspicious Day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos