»   »  மீண்டும் வருகிறார் ஆறுச்சாமி: 'சாமி 2'வுக்கு ரெடியாகும் ஹரி, விக்ரம்- அப்போ த்ரிஷா?

மீண்டும் வருகிறார் ஆறுச்சாமி: 'சாமி 2'வுக்கு ரெடியாகும் ஹரி, விக்ரம்- அப்போ த்ரிஷா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று இருமுகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அறிவித்துள்ளார்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்துள்ள இருமுகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஹரி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Hari, Vikram get ready for Saamy 2

விழாவில் பேசிய ஹரி கூறுகையில்,

சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளோம். நீங்கள் மறுபடியும் ஆறுச்சாமியை பார்க்கலாம். சாமி படத்தை விட இரண்டாம் பாகத்தை சிறப்பாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஒளிப்பதிவை பிரியன் பார்த்துக் கொள்வார்.

இசை ஹாரிஸ் ஜெயராஜ் பொறுப்பில் விடப்படுகிறது என்றார்.

விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சாமி படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் ஹரி, விக்ரம், த்ரிஷாவுக்கு முக்கியமான படமாகும். இந்நிலையில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

English summary
Director Hari has announced that Saamy 2 project will be kick started soon with Vikram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos