twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ராஸ் ‘ஜானி’ கேரக்டருக்காக ஒன்றரை வருஷம் அழுக்கா திரிஞ்சேன்...: ஹரிகிருஷ்ணன்

    |

    சென்னை: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் ‘மெட்ராஸ்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று தான் ஜானி.

    செம்பட்டைத் தாடியோடு இடுப்பு வரை பேண்ட்டும் கையில் இங்கிலீஷ் பேப்பருமாய் ஜானி வரும் காட்சிகள் அப்படத்தில் பரபரப்பை உண்டாக்குபவை. இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கும் இந்த ஜானி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் 25 வயது ஹரி கிருஷ்ணன் என்பவர்.

    தனது மெட்ராஸ் பட அனுபவம் குறித்து ஹரி கிருஷ்ணன், டைம்பாஸ் வார இதழுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    மைம்...

    மைம்...

    நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மைம் எனப்படும் மௌன நாடகங்களில் நடித்துள்ளேன். மெட்ராஸ் படத்துல இண்டர்வெல் ப்ளாக்ல கார்த்தி சார் கொல்ற ரவுடியா நடிச்சிருக்கிற மைம் கோபி அண்ணனும், என் சீனியர் பிரபாகர் என்பவரும் தான் என்னை இந்த மைம் கலையில நல்லா வளர்த்து விட்டாங்க.

    அட்டக்கத்தி வாய்ப்பு...

    அட்டக்கத்தி வாய்ப்பு...

    அட்டக்கத்தி ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்கப் போனப்ப, ரஞ்சித் அண்ணா என்னை ஒரு சீன்ல நடிக்க வச்சார். நல்லா நடிச்சதும் மேலும் சில சீன்ஸ் எனக்குத் தந்தார். அப்படித்தான் அட்டக்கத்தில இரண்டாம் பாதி பூரா வர்ற மாதிரி எனக்கு காட்சிகள் அமைஞ்சது.

    மெட்ராஸ்...

    மெட்ராஸ்...

    அப்புறம் மரியான்ல ஒரு சின்ன ரோல்ல நடிச்சேன். திரும்ப ரஞ்சித் அண்ணா கூப்பிட்டு மெட்ராஸ்ல புத்தி சுவாதீனமில்லாத ஒரு கேரக்டர் இருக்குனு சொன்னார்.

    கீழ்ப்பாக்கம் பகுதி...

    கீழ்ப்பாக்கம் பகுதி...

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அயனாவரம் ரயில்வே குவார்ட்டஸ் ஏரியாங்கறதால, பக்கத்துல கீழ்ப்பாக்கத்துல இருந்து வந்தவங்க நிறையப் பேரைப் பார்த்து இருக்கேன்.

    நான் சந்தித்த மனிதர்கள்...

    நான் சந்தித்த மனிதர்கள்...

    "நான் தெளிவா இருக்கேன் ஹரி. எம்.பி.ஏ-லாம் படிச்சிருக்கேன். இதைச் சொன்னா லூஸூங்குறாய்ங்க'என்பார் ஒருத்தர். ‘காலையில எழுந்திரிச்சதும் இங்கிலீஷ் பேப்பர் படிக்காட்டா கண்ணு அவிஞ்சிடும்'னு அலுத்துக்குவார் ஒருத்தர்.

    சொந்த அனுபவங்கள்...

    சொந்த அனுபவங்கள்...

    இப்படி தனக்குத் தானே பேசுறவங்க அரசியலை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு மேயுற ஆளுங்களாவும் இருப்பாங்க. அந்த அனுபவங்களை ‘மெட்ராஸ்' ஜானி கேரக்டர்ல காட்ட ரஞ்சித் அண்ணனும் இடம் கொடுத்தார்.

    ஜெராக்ஸ் தான்...

    ஜெராக்ஸ் தான்...

    படத்துல நான் யூஸ் பண்ணின பாடி லாங்வேஜ் அப்படியே நான் பார்த்துப் பழகிய நாலு பேர் கிட்ட இருந்து ஜெராக்ஸ் எடுத்தது தான். ரஞ்சித் அண்ணன் ரெண்டு வருஷமா என்னை அந்த கேரக்டராவே செதுக்கிட்டார்.

    ரொம்ப மெனக்கெட்டேன்...

    ரொம்ப மெனக்கெட்டேன்...

    ஒன்றரை வருஷம் அழுக்கா திரிஞ்சேன். கண்ணுக்குக் கீழே கருவளையம். தோல் பூரா புழுதினு ரொம்ப மெனக் கெட்டேன். இப்போ என் கேரக்டருக்கு தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதைப் பார்த்து ரஞ்சித் அண்ணனே சந்தோஷமாகிட்டார்' என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் ஹரிகிருஷ்ணன்.

    English summary
    In an interview to a Tamil weekly magazine, the actor Harikrishanan who played as Jani in the film Madras has said that he took so much efforts for the character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X