twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹார்வர்டு பல்கலை.யில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் கமல் ஹாஸன்!

    By Shankar
    |

    ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் கமல் ஹாஸன் பெற்றுள்ளார்.

    மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமலஹாசனுக்கு, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மரியாதை அளிக்க உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை இந்த பல்கலைக்கழகத்தில் அழைத்து பேச வைக்கிறார்கள். கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Harvard University invites Kamal

    வருகிற பிப்ரவரி 6-ந் தேதி இந்த பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 6-ந் தேதி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமலஹாசன் உரையாற்றுகிறார்.

    இந்த விழாவில், இந்தியா சார்பில் கமல் தவிர காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட வேறு சிலரும் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற்றுள்ளார்.

    Read more about: kamal கமல்
    English summary
    The Harvard University has invited actor Kamal Hassan to give a lecture for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X