»   »  விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: அஜீத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் கோலிவுட்#vivegam

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: அஜீத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் கோலிவுட்#vivegam

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத்தின் மரண மாஸான உடல்கட்டை பார்த்துவிட்டு தமிழ் திரையுலகினர் அசந்து போயுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு விவேகம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் ஜிம் பாடியுடன் கும்மென்று உள்ளார். அவரின் உடல்வாகை பார்த்து தான் அனைவரும் அசந்து போயுள்ளார்கள்.

இது குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தனுஷ்

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த தனுஷ் ஓ யெஸ் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தி


சும்மாவே தல பேன்ஸ் நம்மெல்லாம் மொரட்டுத்தனமா இருப்போம்... இப்ப நம்ம #தலயே இப்படி வந்துட்டாரா.. கேக்கவாவேணும்... #விவேகம் @SureshChandraa

குஷ்பு

ம்ம்ம்ம்ம்...நான் அப்பவே சொன்னேன்..தலன்னா தல தான்.. என் ஜார்ஜ் க்ளூனி இப்ப என் ஹ்யூ ஜாக்மேன்..என்ன ஒரு மாற்றம்..பிடிச்சிருக்கு...😍😍😍❤❤❤❤👍👍👍👍😘😘😘

விக்ரம் பிரபு

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அத்தனை வலியிலும் ஒர்க் செய்து இதை சாதித்துள்ளது அருமை. விவேகம் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற அஜீத் சார் மற்றும் இயக்குனர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் பிரபு

அஜீத்தின் கெட்டப்பை பார்த்து ஓமைகாட் என ட்வீட்டியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

English summary
Kollywood celebs are very much impressed by the way Ajith has transformed himself for his upcoming movie Vivegam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos