twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி பார்க்க அதிகாலை 5 மணியிலிருந்து க்யூவில் காத்திருக்கும் ரசிகர்கள்!

    By Shankar
    |

    பாகுபலி பட வெளியீட்டை கிட்டத்தட்ட ஒரு திருவிழா மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும்.

    தமிழகம் உள்ளிட்ட மற்ற இடங்களிலும் பாகுபலி படத்துக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு.

    இந்தப் படம் நாளை மறுநாள்தான் உலகெங்கும் வெளியாகிறது. ஆனால் வெளிநாடுகள் மற்றும் ஹைதராபாதில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் நாளை அந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது.

    அதிகாலை 5 மணிக்கே

    அதிகாலை 5 மணிக்கே

    இந்தக் காட்சிக்கு டிக்கெட் வாங்க அதிகாலை 5 மணிக்கு முன்பே கூட்டம் திரண்டுவிட்டது. ஐமேக்ஸ் அரங்கிலிருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட க்யூவில் டிக்கெட்டுக்காக காத்திருந்தனர்.

    4000 அரங்குகள்

    4000 அரங்குகள்

    பாகுபலி படம் 4000 அரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. ஆந்திராவில் இதுவரை எந்தப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அரங்குகளில் படம் ரிலீசாகிறது. தமிழகத்தில் 300-க்கும் அதிகமான அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில்

    கர்நாடகத்தில் இந்தப் படத்தின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள் வெளியாகின்றன. மலையாளத்திலும், ஹிந்தியிலும் அந்தந்த மொழிகளின் டப்பிங் பதிப்பு வெளியாகிறது. அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் பாகுபலி வெளியாகிறது.

    சென்னையில்..

    சென்னையில்..

    சென்னையில் 25 அரங்குகளில் பாகுபலி தமிழும், 6 அரங்குகளில் அதன் தெலுங்குப் பதிப்பும் வெளியாகிறது. ஆனால் சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய அரங்குகளில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.

    English summary
    A huge crowd is waiting in front of Prasad Imax theater in Hyderabad to get tickets for Bahubali special show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X