twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சித்தார்த் அபிமன்யுவைக் கொண்டாடிய மக்கள்... பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்த மோகன்ராஜா

    |

    சென்னை: தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியின் மித்ரன் கதாபாத்திரத்தைவிட, அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்ததால், பல நாட்கள் தூக்கமின்றி தவித்தாராம் அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா.

    ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் தனி ஒருவன். தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படம், வெளியான முதல் 10 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்தது.

    இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது பெற்ற மோகன் ராஜா, அந்த விழாவில் பேசும்போது, சித்தார்த் அபிமன்யுவின் வெற்றி தன்னை கவலைப்பட வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

    தனி ஒருவன்...

    தனி ஒருவன்...

    ரீமேக் இயக்குநர் என்ற பெயரை உடைத்து மோகன் ராஜாவின் திறமையை வெளிக் கொணர்ந்த படம் தனி ஒருவன். அதேபோல், இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

    அழகான வில்லன்...

    அழகான வில்லன்...

    நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவில் எண்ட்ரியான அரவிந்த்சாமி, இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற அழகான வில்லனாக அதிரடியாக நடித்திருந்தார். இதனால், அவரது வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

    கவலை...

    கவலை...

    ஆனால், இப்படத்தில் நாயகனை விட்டு விட்டு வில்லனை மக்கள் கொண்டாடியதால், தான் தவறான படத்தை எடுத்து விட்டமோ என மோகன் ராஜாவிற்கு கவலை வந்து விட்டதாம். இதனால் பல இரவுகள் அவர் தூக்கமில்லாமல் தவித்தாராம்.

    ஹேப்பி...

    ஹேப்பி...

    ஆனபோதும் யாரும் ஏன் கிளைமேக்ஸில் அரவிந்த் சாமியைக் கொன்றீர்கள் எனக் கேள்வி எழுப்பாதது மோகன் ராஜாவிற்கு ஆறுதலாக அமைந்ததாம். அதனால் அவர் சந்தோசப்பட்டுக் கொண்டாராம்.

    English summary
    Director Mohan Raja said, “I had lost sleep over this for many nights and wondered if I had made a wrong film. But the silver lining was nobody questioned me why I killed Siddharth Abhimanyu. I am happy about that.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X