twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மழை நம் அனைவரையும் தற்காலிக அகதிகளாக மாற்றியிருக்கிறது - ஏ.ஆர்.ரகுமான்

    By Manjula
    |

    சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் வெள்ளம் புகுந்தது.

    தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை சென்னை மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழை, வெள்ளம் பிரபலங்களின் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை.

    ஏற்கனவே நடிகர் சித்தார்த், நடிகை கனிகா ஆகியோர்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் நேற்று வெள்ளநீர் புகுந்தது.

    Friends and Well wishers, thank you for your kind concerns. It's very difficult to see fellow Chenaiites and people...

    Posted by A.R. Rahman on Thursday, December 3, 2015

    இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இதுகுறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார் " என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் அக்கறைகளுக்கும் நன்றி.

    சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைக் காண மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    நம்மில் பலர் இந்த மழையால் தற்காலிக அகதிகளாகி மாறியிருக்கிறோம்.என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ குழுவினர் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வீடு மற்றும் ஸ்டுடியோவிற்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலமாக வெளியேற்றி வருகின்றனர்.

    சென்னை சரியான வகையில் மீண்டும் புதுப்பிக்கப்படும் மற்றும் அதன் மூலமாக நாம் அனைவரும் எதிர்வரும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவோம் என்று நம்புகிறேன்.

    இதனை நாம் சுலபமாக செய்திடும் வகையில் கடவுள் நமக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்".

    English summary
    Chennai Rain: Music Composer A.R.Rahman says "I hope we rebuild Chennai in the right way now to protect us from future calamities. May God protect us all and make it easy for us!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X