»   »  நானும் தான்..: டோணியிடம் சூர்யாவின் மகன் கூறிய ரகசியம்

நானும் தான்..: டோணியிடம் சூர்யாவின் மகன் கூறிய ரகசியம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் உங்களை போன்று தான் குறும்புக்காரனாக்கும் என நடிகர் சூர்யாவின் மகன் தேவ் கிரிக்கெட் வீரர் டோணியிடம் தன்னைப் பற்றிய ரகசியத்தை தெரிவித்தார்.

கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தி படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படத்தை விளம்பரப்படுத்த டோணி சென்னை வந்தார்.

சத்யம் சினிமாஸில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

சூர்யாவின் பிள்ளைகள்

சத்யம் சினிமாஸில் நடந்த நிகழ்ச்சிக்கு சூர்யாவின் குழந்தைகள் தியா மற்றும் தேவ் தங்களின் தாய் ஜோதிகாவுடன் வந்திருந்தனர். தங்களுக்கு பிடித்த டோணி அங்கிளுக்கு பூங்கொத்து கொடுத்து சில கேள்விகளை கேட்டனர்.

குறும்பு

பள்ளியில் படிக்கும்போது குறும்பு செய்திருக்கிறீர்களா என தியா டோணியிடம் கேட்டார். அதற்கு அவர் ஆம், நான் பள்ளிப் பருவத்தில் குறும்புக்காரனாக இருந்தேன். அந்த வயதில் அப்படித் தான் இருக்க வேண்டும் என்றார்.

தேவ்

டோணி தான் குட்டிப் பையான இருந்தபோது குறும்புக்காரனாக இருந்ததாக கூறியதை கேட்ட தேவ் நானும் குறும்புக்கார பையன் தான் என்று மெதுவாக தெரிவித்தார். பார்த்தால் அமைதியாக இருக்கும் தேவ் குறும்புக்காரராம்.

சூர்யா

தனது பிள்ளைகள் தேவ், தியா கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த டோணிக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். தனது பிள்ளைகள் தங்களுக்கு பிடித்த டோணி அங்கிளை சந்தித்து பேசியதில் சூர்யாவுக்கு மகிழ்ச்சி.

ரசிகன்

நான் உங்கள் அப்பா சூர்யாவின் ரசிகன். அவர் நடித்த சிங்கம் படத்தை பார்த்தேன். என்ன கம்பீரம் என டோணி தேவ் மற்றும் தியாவிடம் தெரிவித்துள்ளார்.

English summary
Suriya's son Dev told cool captain Dhoni that he is also a naughty boy like him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos