»   »  நடிப்பில் இனி விஜய்க்கு நான்தான் போட்டி!- அப்பா எஸ் ஏ சந்திரசேகர்

நடிப்பில் இனி விஜய்க்கு நான்தான் போட்டி!- அப்பா எஸ் ஏ சந்திரசேகர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

நடிப்பில் என் மகன் விஜய்க்கு இனி நான்தான் போட்டி என்றார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். கடைசியாக அவர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

I'm the competitor for Vijay, says SA Chandrasekaran

அதன்பிறகு படங்களை இயக்கப் போவதில்லை என்று கூறிவிட்டார். இப்போது நையப்புடை என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அதுவும் ஆக்ஷன் ஹீரோ!

இந்தப் படத்தின் அறிமுக விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், "விஜய்க்கு ரொம்ப கஷ்டப்பட்டு அனைத்துப் பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்து ஹீரோ ஆக்கினேன்.

எனக்கும் நடிப்பின் மீது தீராத ஆசை உண்டு. அவ்வப்போது சிறு பாத்திரங்களில் நான் தோன்றினாலும், டூரிங் டாக்கீசில் ஒரு பாதியில் நாயகனாக நடித்தேன். அந்தப் படம் பார்த்துவிட்டு தாணு பாராட்டினார்.

இப்போது நையப்புடை படத்தின் முழு ஆக்ஷன் நாயகனாக நடித்திருக்கிறேன். படத்தை சமீபத்தில் பார்த்தபோது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

இந்தப் படம் வெளியானதும், விஜய்க்கு நான்தான் போட்டியாக இருப்பேன் என்று நினைக்கிறேன்," என்றார் சிரித்தபடி.

English summary
Director turned actor SA Chandrasekhar says jovially that he would be the competitor for Vijay in future.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos