»   »  வெளியானது ஐ ட்ரைலர்!

வெளியானது ஐ ட்ரைலர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில், ஐ படம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது. ரூ 180 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ, வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.

('ஐ' ட்ரைலர்)

டீசர்

படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு முன்னிலையில் வெளியானது. இணையத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்தது.

ட்ரைலர்

இப்போது படத்தின் 2 நிமிட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு யுட்யூபில் இதனை வெளியிட்டது ஆஸ்கார் மூவீஸ் நிறுவனம்.

5 லட்சம்

வெளியான 9 மணி நேரத்தில் இந்த ட்ரைலருக்கு 5 லட்சம் பேருக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

ஹாலிவுட் படத்துடன்

இந்த ட்ரைலர் உலகெங்கும் ஹாலிவுட் படமான தி ஹாப்பிட்டுடன் இணைத்து திரையிடப்பட உள்ளது.

ஜனவரி 9 முதல்..

ஐ படம் உலகம் முழுவதும் பல ஆயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. வசூலில் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Shankar's I theatrical trailer was released on Dec 18th night in youtube.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos