»   »  இளையராஜா இசையில் ராஜ தந்திரம் 2

இளையராஜா இசையில் ராஜ தந்திரம் 2

Posted by:
Subscribe to Oneindia Tamil

கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களைக் கவர்ந்த படங்களுள் ஒன்று ராஜதந்திரம்.

நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவர் செந்தில் வீராசாமி. இயக்குநர் கௌதம் மேனனிடம் வித்தை கற்றவர்.

'ராஜ தந்திரம்' 2' படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்த, ராஜ தந்திரம் முதல் பாகத்தில் நடித்த வீரா உட்பட மூன்று பேர் நடித்த ஆறு நிமிட முக்கியக் காட்சியை முன்னோட்டமாக வெளியிட்டுள்ளார்.

"ராஜ தந்திரம் 2 படம், அதன் முதல் பாகத்தின் சுவாரஸ்யத்துக்கு சற்றும் குறையாமல் இருக்கும். சொல்லப் போனால் இன்னும் ஒரு படி மேல் இருக்கும். காரணம், எங்களுக்கு வலு சேர்க்க இசை ஜாம்பவான் இளைய ராஜா சார் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பெருமை," என்கிறார் செந்தில் வீராசாமி.

சமீபத்தில் வெளியான இந்த ஆறு நிமிடக் காட்சியும் அதற்கு இளையராஜாவின் பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக செந்தில் வீராசாமி தெரிவித்தார்.

இந்தப் படத்தை கௌதம் மேனன் தயாரித்துள்ளார்.

English summary
A six minute trailer for Rajathanthiram 2 has been released in Ilaiyaraaja's music recently.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos