twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவம், இல்லாதவங்க எடுத்துக்கிட்டுமே! - படங்களில் தன் பாடல்களை பயன்படுத்துவது குறித்து ராஜா!

    By Shankar
    |

    தான் இசையமைக்காத பல படங்களில் தன் பாடல்கள் எடுத்தாளப்படுவது குறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, 'பாவம், இல்லாதவர்கள் எடுத்துக் கிட்டுப் போகட்டுமே,' என்று பதிலளித்துள்ளார்.

    இளையராஜா இசையின் தாக்கம் இல்லாமல் இன்றைக்கு இசையமைப்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. அந்த அளவு அவரது இசை நீக்கமற நிறைந்துள்ளது. இளமையின் ஆரம்பத்திலிருப்பவரும் சரி, இறுதிக் கட்டத்திலிருப்பவரும் சரி... இளையராஜா இசையோடுதான் வாழ்கிறார்கள்.

    அனுமாலிக்

    அனுமாலிக்

    முன்பெல்லாம், இந்தி இசையமைப்பாளர்கள் குறிப்பாக அனுமாலிக் போன்றவர்கள் இளையராஜாவின் புகழ் பெற்ற மெட்டுக்களை அப்படியே சுட்டு இந்திப் பாடலாகப் போடுவது வழக்கம்.

    ஓ ப்ரியா ப்ரியா... பாடலை, போல் ராதா போல் படத்தில் ஓ ப்யா ப்யா என்று போட்டிருந்தார் அனுமாலிக். ஆனால் ஒப்புக்குக் கூட ராஜாவுக்கு அவர் நன்றி சொல்லவில்லை. இது அப்பட்டமான காப்புரிமைத் திருட்டு.

    தக் தக் கர்னே

    தக் தக் கர்னே

    பேட்டா படத்தில் தக் தக் கர்னே லகா என்ற பாட்டும் இளையராஜாவின் தெலுங்கு - தமிழ் பாடல் (சம்மதம் தந்துட்டேன்...) ஒன்றின் காப்பிதான். விராசத் படத்தில் இஞ்சி இடுப்பழகாவை அப்படியே உருவிக் கொண்டார்கள். இதற்கும் இசை அனுமாலிக்தான்.

    இதுகுறித்து இளையராஜாவிடம் ஒரு முறை கேட்டபோது, 'இதுக்கெல்லாம் வழக்குப் போடனும்னு போனா, இசையமைக்க எனக்கு நேரமே பத்தாது' என்றார் கிண்டலாக.

    ரீமேக் கொலைகள்

    ரீமேக் கொலைகள்

    அதன் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளின் இறுதியில் ரீமேக் என்ற பெயரில் ராஜாவின் பாடல்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள்.

    அவரது எத்தனையோ தேவாமிர்தப் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்தார்கள்.

    அப்படியே எடுத்துக்குவோமே...

    அப்படியே எடுத்துக்குவோமே...

    இப்போது வேறு ட்ரெண்ட். இது சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் ஆரம்பித்து வைத்தது. அதாவது காட்சிகளுக்கான பின்னணி இசையாக ராஜாவின் பாடல்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வது. கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 படங்களிலாவது ராஜாவின் பாடல்களை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள், குறைந்தபட்ச நன்றி அறிவிப்பு கூட போடாமல்.

    குட்டிப்புலி - குக்கூ

    குட்டிப்புலி - குக்கூ

    அதுவும் குட்டிப்புலியில் பொன்னோவியம்.. என்ற ராஜாவின் பாடலை முழுமையாக ஒலிக்க விட்டு, ஒரு பாடல்காட்சியாக மாற்றியிருந்தனர். இதற்கும் ராஜாவின் அனுமதி கேட்கவில்லை.

    குக்கூ படத்திலோ, பெருமளவு இசையே ராஜாவின் பழைய பிஜிஎம்களிலிருந்துதான் எடுத்திருந்தனர். அவ்வப்போது ராஜாவின் பாடல்களையும் உருவியிருந்தார்கள். ஆனால் நன்றி - இளையராஜா என டைட்டிலில் போடக்கூட அவர்களுக்கு மனசு வரவில்லை.

    இதுகுறித்து கேட்டபோது, அப்பாவுக்கு நன்றி சொல்வோமா என சாமர்த்தியமாக சமாளித்தார் இயக்குநர்.

    கேள்வி

    கேள்வி

    இந்தப் போக்கு குறித்து இளையராஜாவிடமே நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது.

    "இன்று வரும் திரைப்படங்களில் உங்களின் பாடல்களை பின்னனியில் ஒலிக்க விட்டு படத்தை நகர்த்தி விடுகிறார்களே...", என்று கேட்டிருந்தார் தேனி கண்ணன்.

    இங்கதானே வரணும்...

    இங்கதானே வரணும்...

    அதற்கு ராஜா அளித்த பதிலில், "பாவம்... இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் இருக்கும் இடத்திலிருந்துதானே எடுப்பார்கள். எடுத்து விட்டுப்போகட்டும். எங்கு போனாலும் இங்குதானே வந்தாக வேண்டும்," என்று கூறியிருந்தார்.

    English summary
    Ilayaraaja says that plagiarism of other music directors happen due to dry in their creativity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X