»   »  கபாலி படத்துக்காக சிறப்பு அஞ்சல் உறை விற்பனை... தபால் துறை ஏற்பாடு!

கபாலி படத்துக்காக சிறப்பு அஞ்சல் உறை விற்பனை... தபால் துறை ஏற்பாடு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறை விற்பனையை அஞ்சல் துறை தொடக்கியுள்ளது.

Select City
Buy Kabali (U) Tickets

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்பட வெளியீடு உலகளவில் ஒரு திருவிழா மாதிரியான நிகழ்வாக மாறியுள்ளது.


Indian Postal Department starts selling Kabali Special Covers

இந்தப் படம் வெளியாகும் ஜூலை 22-இல் கபாலி ரஜினி உருவத்துடன் பறக்கும் தனி விமான சேவைக்கு ஏர் ஏசியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, பெங்களூருலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து பெங்களூருக்கும் 'கபாலி விமானம்' மூலம் ரசிகர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.


இதுபோல் கர்நாடக அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியன இணைந்து கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.


இதற்காக, சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.


இதன்மூலம், கபாலி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விமானத்தில் பயணிக்கும் ரசிகர்களுடன் சிறப்பு அஞ்சல் உறையும் இடம்பெற்றிருக்கும் என அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Postal Department has made arrangements for Kabali Special postal cover sales on the eve of Rajinikanth's Kabali movie release from Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos