twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெல்லையிலிருந்து மும்பை சென்று செட்டில் ஆன 'கூடுவாலா சேட்’டின் கதையா காலா? #Kaala

    By Shankar
    |

    சென்னை: ரஜினி - ரஞ்சித் காம்பினேஷனில் மும்பையை பின்னணியாகக் கொண்ட காலா படம் பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நெல்லையிலிருந்து மும்பை சென்று செட்டிலானவரின் கதை என்று கூறப்படுகிறது.

    வரதராஜ முதலியாரைப் பற்றி ஏற்கனவே நாயகன் படம் வந்து விட்டது. ராமநாதபுரம் பகுதியைச் சார்ந்த ஹாஜி மஸ்தான் பற்றிய கதை தான் காலா என்று முதலில் கூறப்பட்டது. அவருடைய மகன் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ரஜினி தரப்பும் அந்தக் கதை அல்ல என்று மறுத்திருந்தது.

    Is Kala a real story of Mumbai immigrant from Nellai

    தற்போது நெல்லையிலிருந்து சென்ற குடும்பத்தின் கதை என்று ரஞ்சித் கூறிவிட்டார். பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தை சார்ந்த திரவியம் நாடார் என்பவர், சிறுவயதிலேயே மும்பை சென்றவர். அங்கு உள்ளூர் மராட்டியர்களுக்கு எதிராக பொங்கி எழுந்து தாராவி பகுதியில் குடியிருப்பு (சால்கள்) பகுதிகளை உருவாக்கியவர்.

    குளமும் குட்டையாக இருந்த இடத்தில் கல் மண்ணை நிரப்பி, குடிசை போட்டுத்தான் தாராவி உருவாக்கப்பட்டது. பதிமூன்று வயதிலேயே மும்பை சென்ற திரவிய நாடார் அங்கு தான் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர்களின் குடிசையை சேதப்படுத்திய மராட்டியர்களை எதிர்த்து நின்று போராளி ஆனார்.

    பின்னர் தமிழகத்திலிருந்து, குறிப்பாக நெல்லையிலிருந்து மும்பை வரும் எல்லோருக்கும் அடைக்கலம் தந்தார். குடிசை அமைத்துக் கொடுத்து, மில்களில் வேலைக்கு ஆள் சேர்த்துவிடுவது என உதவிக்கரம் நீட்டினார்.

    நெல்லை மட்டுமல்லாமல், சேலத்திலிருந்து வந்தவர்களுக்கும் புகலிடம் தந்தார். சாதி மத பேதமின்றி அனைவரையும் அரவணைத்தவர். மாதுங்கா, செம்பூர் பகுதிகளில் வசித்து வந்த பிராமணர்களுடனும் நல்லுறவு வைத்திருந்தார்.

    பிராமணர்களுக்கு மட்டுமே என்று இருந்த காலத்திலேயே, பிரசித்தி பெற்ற சண்முகானந்தா ஹாலில் ஆயுள்கால உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். மும்பைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியதிலும் அதற்கான கட்டிடத்தைக் கட்டியதிலும் முக்கிய பங்காற்றியவர்.

    மும்பையில் வேலை கிடைக்காதவர்களை குஜராத் மில்களுக்கும் அனுப்பி வைத்தார். தனக்கென ஒரு தொழிலுக்காக தமிழகத்திலிருந்து வெல்லத்தை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ததால் 'கூடு வாலா சேட்' என்றே கடைசி வரையிலும் அழைக்கப்பட்டார்.

    அந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியத்துடன் இணைந்து செயல்பட்டார். நீண்ட நாட்கள் திருமணம் செய்யாமலே இருந்த அவரை குட்டிக் காமராஜர் என்றும் அழைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.

    இறுதிக் காலம் வரையிலும் தாராவி, கோலிவாடா பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் அவருடைய ஆதரவைத் தேடி வந்தனர். தற்போதைய மும்பை மாநகராட்சி கவுன்சிலர் ரவிராஜாவை அடையாளம் காட்டி முதன் முதலாக வெற்றிப் பெறச்செய்ததில் கூடுவாலா சேட்டின் பங்கு முக்கியமானது.

    அன்று முதல் இன்று வரை, ஒரிரு தேர்தல் தவிர தொடர்ந்து கவுன்சிலராக இருக்கும் தமிழர் ரவிராஜா ஆவார்.

    Is Kala a real story of Mumbai immigrant from Nellai

    வரதராஜ முதலியாருடனும் ஹாஜி மஸ்தானுடனும் நல்லுறவு கொண்டவர், ஆனால் கடத்தல் தொழிலுக்கு வரமாட்டேன் என்று இறுதி வரையிலும் உறுதியாக இருந்தவர்.

    தாராவி மக்கள் வசதிக்காக கொடுத்த ஆம்புலன்ஸில் ஒரு தடவை கடத்தல் பொருள் எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்தார். மொத்த தமிழர்களுக்கும் சிக்கல் வரும் என்று அந்த ஆம்புலன்ஸ் சேவை இனி தேவை இல்லை என்று மறுத்து விட்டார்.

    கோடிக்கணக்கில் கட்டிடங்களை வளைத்துப் போட வாய்ப்பு இருந்தாலும், தனக்கென அவர் பெரிதாக எதையும் வைத்துக்கொள்ளவில்லை. மும்பை வளம் கொழிக்க ஆரம்பித்தது. இவர் நிரப்பிக் கொடுத்து குடிசைகள் போட்ட இடங்கள் எல்லாம் கட்டிடங்கள் ஆனது.

    அவர் விட்டுக்கொடுத்த, பிடித்துக் கொடுத்த இடத்தை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    காலா நெல்லைப் பகுதியிலிருந்து வந்தவர் என்று கூறப்படுவதால் 'கூடுவாலா சேட்' சம்மந்தப்பட்ட கதையாக இருக்குமோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

    - இர தினகர்

    English summary
    Kala could be based on real story of Gudu Vaala Sait, a man migrated from Nellai district to Mumbai. Ranjit has also hinted it is based on people migrated from Nellai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X