twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படம் ஓடுச்சுங்கிறதுக்காக விருது கொடுத்திரனுமா.. இதுதான் கேரளா!

    |

    கொச்சி: பிரேமம்.. எல்லார் வாயும் காயத்ரி மந்திரம் போல உச்சரித்த வார்த்தை இது. இதை சொல்லாவிட்டால் சமூகத்தை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு யாரைப் பார்த்தாலும் பிரேமம்... பிரேமம்... பிரேமம் புகழ்தான்.

    ஆனால் கேரளத்து ரசிகர்கள் அந்தப் படத்துக்குக் கொடுத்த வரவேற்பில் ஒரு துளியைக் கூட கேரள அரசின் விருதுக் கமிட்டியினர் கொடுக்கவில்லை. இப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.

    இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதேசமயம், விருது பெற்ற பிற படங்கள் உண்மையிலேயே அட்டகாசமானவை.. பிரேமம் படத்திற்கு நிகரான சிறப்புடையவை. அதில் சந்தேகமே இல்லை.

    நிஜக் கதையின் வெற்றி

    நிஜக் கதையின் வெற்றி

    என்னு நின்டே மொய்தீன் மற்றும் சார்லி ஆகிய இரு படங்களுக்குத்தான் நிறைய விருதுகள் கிடைத்துள்ளன. இதில் முக்கியமானது என்னு நின்டே மொய்தீன். இப்படம் ஒரு நிஜக் கதையின் தழுவல் ஆகும்.

    பார்வதி

    பார்வதி

    இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பார்வதி. அவரே மாநிலத்தின் சிறந்த நாயகியாக தேர்வாகியுள்ளார். அதேபோல துல்கர் சல்மான், சார்லி படத்திற்காக சிறந்த நடிகராக தேர்வாகியுள்ளார்.

    சிலாகிக்கப்பட்ட பிரேமம்.. ஏமாற்றம்

    சிலாகிக்கப்பட்ட பிரேமம்.. ஏமாற்றம்

    இதில் அதிகம் சிலாகிக்கப்பட்ட, பேசப்பட்ட, ஓடவும் செய்த படம் பிரேமம். ஆனால் அப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. நிச்சயம் ஆச்சரியம்தான். ஆனால் அதிர்ச்சிக்கு இங்கு இடமில்லை. காரணம், இது கேரளம்!

    பிற மாநிலங்கள் போல இல்லை கேரளா

    பிற மாநிலங்கள் போல இல்லை கேரளா

    கேரளாவுக்கும், பிற மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம், சினிமாவிலும் கூட உண்டு. தமிழிலோ அல்லது தெலுங்கிலோ அல்லது தேசிய அளவிலோ ஒரு படம் பயங்கரமாக ஓடி விட்டால் உடனே அடித்துப் பிடித்துக் கொண்டு விருதுகளை வாரிக் கொடுத்து விட்டுத்தான் ஓய்வார்கள்.

    நியாயமான தேர்வுதான்

    நியாயமான தேர்வுதான்

    ஆனால் கேரளாவில் இந்த முறை கொடுக்கப்பட்ட விருதுகளில் அநீதி இழைக்கப்பட்டது போலவே தெரியவில்லை. காரணம், விருதுக்காக தேர்வாகியுள்ள பிற படங்களும், கலைஞர்களும் கூட அந்த விருதுகளுக்குத் தகுதியானவர்கள்தான்.

    சார்லியில் அசத்திய துல்கர்

    சார்லியில் அசத்திய துல்கர்

    உண்மையில் பிரேமம் நிவின் பாலியை விட துல்கர் சல்மான் சார்லி படத்தில் அசத்தியிருப்பார். அந்த வகையில் பார்த்தால் அவருக்குத் தரப்பட்ட விருது சரியாகவே தோன்றுகிறது.

    காஞ்சனமாலாவாக வாழ்ந்த பார்வதி

    காஞ்சனமாலாவாக வாழ்ந்த பார்வதி

    காஞ்சனமாலா - மொய்தீன் என்ற காதல் ஜோடியின் நிஜக்கதைதான் என்னு நின்டே மொய்தீன். இப்படத்தை எதிர்த்து காஞ்சனமாலா வழக்கெல்லாம் கூட போட்டார். பின்னர் அது சமரசமாக முடிந்தது. இப்படத்தில் நிஜ காஞ்சனமாலாவைக் கண்முன் கொண்டு வந்திருப்பார் பார்வதி.

    பூச்சில்லாத எதார்த்தம்

    பூச்சில்லாத எதார்த்தம்

    கேரள விருதுகள் பெரும்பாலும் பூச்சில்லாத எதார்த்தங்களுக்குத்தான் தரப்படும். அந்த அடிப்படையில் இந்த விருதுகளும் தரப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

    அதேசமயம், பலரும் பார்த்து ரசித்த படம் என்ற வகையில் பிரேமம் படத்திற்கு சிறந்த பொழுது போக்கு விருதாவது கொடுத்திருக்கலாம்.

    English summary
    All the film buffs are upset over the ignorance of Premam in the Kerala state film awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X