twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற நடிகர் சங்கத்தின் உள்குத்து வேலை!?

    By Shankar
    |

    சரத்குமார் அண்ட் கோவிடமிருந்து நடிகர் சங்கத்தைக் கைப்பற்றிய விசால் அண்ட் டீம் சங்கத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மைதான்! ஆனால் அதன் தொடர்பாக அவர்கள் செய்கிற சில விஷயங்கள் எதிர் விமர்சனத்திற்கு ஆளாகிறது என்பதையும் மறுக்க முடியாது!

    இதன் ஒரு கட்டமாக நடிகர் சங்க வளாகத்தில் கட்டப்படவிருக்கிற கட்டடத்தில் உருவாகும் திரையரங்கம் கட்டுவதற்கான மொத்தப் பணத்தையும் நடிகர் சிவகுமார் குடும்பம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதை ஏற்கனவே நமது இணையத்தில் சொல்லியிருந்தோம்.

    இதனால் நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள், மேற்படி குடும்பத்தார் விரும்புகிறபடியே எடுக்கப்படுவதாக சில இளம் நடிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதனாலென்ன தப்பு!? சங்கப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் இந்தத் தலைமுறை நடிகர்கள். நடிகர் சிவக்குமார் அப்படியல்ல! மூன்று தலைமுறை நடிகர்களோடு நடித்த மூத்த கலைஞர். அவரது வழிகாட்டுதலின் படி சங்கத்தை நடத்துவதுதான் ஆரோக்கியமானதும் கூட!

    Is Nadigar Sangam tires to capture Producers council?

    ஆனால் கடந்த சில வாரங்களாக இவர்களது அதிகாரம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரை நீண்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி தருவதாக உள்ளன!!

    என்ன? ஒரு படம் பெரிய அளவில் வியாபாரம் ஆக வேண்டுமானால், தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி அறியப்பட்ட நடிகராக இருக்க வேண்டியது கட்டாயம் என்பது சினிமாவின் வியாபாரக் கணக்கு. அதுவே நடிகர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கிற இடம்.

    அதற்காகவே நடிகர்கள் தங்களது படங்களை இங்கே தமிழில் ரிலீஸ் ஆகிற,அதே டைமில் பிற மொழிகளிலும் ரிலீஸ் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். தவிர,சில நடிகர்கள் தற்போது நேரடித் தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சினிமா தொடங்கிய காலத்தில் எல்லா மொழிப் படங்களுக்கும் சென்னைதான் மையமாக இருந்தது. இங்கிருந்து போஸ்ட் புரடக்சன் வேலைகளைப் பார்த்து அங்கே கொண்டு போய் ரிலீஸ் பண்ணுவார்கள்.ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாரும் அவரவர் மாநிலத்தில் தனிதனி அமைப்புகளை உருவாக்கி அங்கேயே வேலைகள் பார்க்க ஆரம்பித்து விட்டது, நாலு லாங்குவேஜ் சினிமா அறிந்த உண்மை.

    இப்படியான நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை உடைத்து ‘தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமாக' மாற்ற, தயாரிப்பாளராக இருக்கும் சில நடிகர்கள், அவர்களுக்கு வேண்டிய சில தயாரிப்பாளர்கள் ஈடுபடுவதாக செய்தி வருகிறது! அதற்கு மேற்படி குடும்பத்து ஆட்கள் முனைப்போடு செயல் படுவதாகச் சொல்லப்படுகிறது.

    அதன் ஒரு திட்டமாக கரண்டாக படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமே பொறுப்பில் இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுபோல் ஒரு உள்குத்து வேலை நடக்கிறதாம்! அதற்கு முன்னணி நடிகர் சிலரும் ‘லைக்' போட்டுக் ‘கமெண்ட்' போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்!?

    அப்படிச் செய்வதன்மூலம் மீண்டும் ஏற்கனவே இருந்ததுபோல் மீண்டும் ‘தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கமாக மாற்ற தடை ஏதும் இருக்காது என கணக்குப் போடுகிறார்களாம்!

    நடிகர் சங்கத் தேர்தல் நடந்தபோது... "வெற்றிபெற்று வருகிற பொறுப்பாளர்கள் ‘தென்னித்திய நடிகர் சங்கம்' என்பதை 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என மாற்றினால் மகிழ்ச்சி அடைவேன்'' என்று ரஜினி வைத்த வேண்டுகோள் இப்பவும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறதே... இதற்குத்தானா!?

    -வீகேஎஸ்

    English summary
    Is the Nadigar Sangam is trying to capture Tamil Film Producers Council? Here is the detailed story on that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X