twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது... கபாலி போஸ்டரும் காப்பியா?!

    By Shankar
    |

    இப்போதெல்லாம் எந்த பிரபல, முன்னணி நடிகர்களின் படங்கள், தலைப்பு, டிசைன்களாக இருந்தாலும் அது 'காப்பி' சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

    கமல், விஜய் படங்கள் இப்படி அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும். எதற்கு தொல்லை என்று கமல் ஹாஸன் இப்போது ரீமேக் படங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவரது கடைசி இரு படங்களும் ரீமேக். அடுத்ததாக வரும் இரு படங்களும் கூட ரீமேக்தான்.

    Is Ranjith's designer copied Kabali poster?

    விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்களின் டிசைன்கள், காட்சிகள் எல்லாம் எங்கிருந்து சுடப்பட்டன என யு ட்யூபில் தேடினால் ஏகப்பட்ட வீடியோக்கள்.

    இந்த சர்ச்சையில் இப்போது ரஜினி படங்களும் சேர்ந்துவிட்டன. லிங்காவில் நகை திருடும் காட்சி ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டதுதான் என இயக்குநர் கேஎஸ் ரவிகுமார் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், அவரது அடுத்த படமான கபாலியின் தலைப்பு மற்றும் ஒரு போஸ்டர் டிசைன் பிலிப்பைன்ஸ் படம் ஒன்றின் தழுவல் என்று சமூக வலைத் தளங்களில் செய்தி பரவி வருகிறது.

    Is Ranjith's designer copied Kabali poster?

    ரஜினி ஆவேசமாக ஒரு சங்கிலியைப் பற்றி வீச, அதில் அவரது எதிரிகள் அனைவரும் வீழ்வது போல உள்ள போஸ்டரைத்தான் அப்படி குறிப்பிட்டுள்ளனர். இந்த டிசைன் டிக்டிக் என்ற தலைப்பில் வெளியான ஆக்ஷன் - பேய்ப் படத்தின் போஸ்டர் போலவே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    போஸ்டரின் சாயல் ஓரளவுக்கு ஒரே மாதிரி தெரிந்தாலும், அதன் அர்த்தம் மற்றும் வடிவமைப்பில் கணிசமான வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

    எதுக்கும் நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க!

    English summary
    One of the poster designs of Rajini's Kabali is said to be copied from a Philippines movie Tiktik The Aswang Chronicles is an action horror comedy adventure film released in 2012.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X