»   »  இயக்குனர் சுராஜின் சர்ச்சை பேச்சு: எல்லாம் 'பப்ளிகுட்டி'க்காகவா பாஸ்?

இயக்குனர் சுராஜின் சர்ச்சை பேச்சு: எல்லாம் 'பப்ளிகுட்டி'க்காகவா பாஸ்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்தி சண்டை படத்தை ஆமீர் கானின் தங்கல் ஓவர்டேக் செய்துள்ள நிலையில் சுராஜ் சர்ச்சையை கிளப்பும்படி பேசியது விளம்பரம் தேடத் தான் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்த கத்தி சண்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. பல காலம் கழித்து முழு நேர காமெடியனாக நடித்த வடிவேலுவின் திறமையை வீணடித்துவிட்டீர்களே என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.


இதற்காக சுராஜை மன்னிக்கப் போவது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மொக்கை

கத்தி சண்டை படம் மொக்கையாக உள்ளது. நிறைய எதிர்பார்த்து போனதற்கு ஏமாற்றமே மிச்சம் என படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


விஷால் ரசிகர்கள்

ஒரு பக்கம் நெட்டிசன்கள் கத்தி சண்டை படத்தை கழுவிக் கழுவி ஊத்த மறுபக்கம் விஷால் ரசிகர்களோ சூப்பர் பாஸ் படம் சூப்பர் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


 


 


சுராஜ்

படம் படுத்துவிட்ட நிலையில் சுராஜ் தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு குட்டி குட்டியாக தான் உடை அளிப்பேன் என்று கூறி நடிகைகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அவரின் படத்தில் குட்டி குட்டியாக உடை அணிந்து நடித்த தமன்னாவே முதல் ஆளாக கோபப்பட்டு சுராஜை விளாசியுள்ளார். கவர்ச்சிக் கடலான நயன்தாராவும் கொந்தளித்துள்ளார்.


விளம்பரம்

கத்தி சண்டை மொக்கை சண்டையாகிவிட்ட நிலையில் விளம்பரம் தேடவே சுராஜ் இப்படி பேசியுள்ளார் என்று பலரும் கூறுகிறார்கள். சுராஜின் பேச்சை கேட்ட பிறகு படத்தில் தமன்னாவின் உடைகளை பார்க்கும் ஆர்வம் பலருக்கம் வந்துள்ளது. ஒர்க் அவுட்டாகிவிட்டது சுராஜின் பப்ளிகுட்டி ஸ்டண்ட்.


English summary
People suspect that director Suraj's interview about actress' short dress is nothing but publicity stunt.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos