» 

'ஏ.ஆர்.ரஹ்மான்' நடிப்பில் படமாகும் 'இசைஞானி'யின் வாழ்க்கை

Posted by:
 

சென்னை: இசை படம் இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறதாம். இதில் ஏ.ஆர். ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம் இசை. இந்த படத்தில் அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் நடிக்கிறாராம். படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையைப் பற்றியது தானாம். இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா.

படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம்.

சூர்யா இசையமைப்பாளரான கதை

எஸ்.ஜே. சூர்யா தனது படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானை கேட்க அவரோ நீங்களே முயற்சி செய்யலாமே என்று ஊக்குவித்துள்ளார். உடனே சூர்யா இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இளையராஜாவின் முக்கியத்துவம்

இசை படத்தில் அந்த காலத்தில் ராமராஜன், மோகன் ஆகியோர்களின் படங்கள் ஓட இளையராஜாவின் இசை தான் காரணம் என்பதையும் கூறியிருக்கிறாராம் சூர்யா.

வைரமுத்துவுடன் லடாய்

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை மற்றும் இசைஞானிக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் இடையேயான உறவு போன்றவை குறித்த காட்சிகள் படத்தில் உள்ளதாம். ஆக இளையராஜாவின் வாழ்க்கையை படம் போட்டும் காட்டுமாம் இசை.

Read more about: ar rahman, isai, ilayaraja, ஏ ஆர் ரஹ்மான், இசை, இளையராஜா
English summary
SJ Surya's Isai is reportedly Ilayaraja's biopic. The director turned music director is acting like AR Rahman in the movie.

Tamil Photos

Go to : More Photos