» 

'செல்ஃபி' தளபதியான விஜய்: அப்போ உங்க 'செல்ஃபி'?

Posted by:
 

சென்னை: கத்தி படத்தில் விஜய்யை பாட வைத்தே தீருவேன் என்று அனிருத் தான் நினைத்ததை சாத்தித்துவிட்டார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் கத்தி. கத்தியின் கதை சுடப்பட்டுவிட்டது, தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று பல பிரச்சனைகளை படம் சந்தித்துள்ளது.

இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அனிருத்

விஜய் சார் படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி. படத்தில் அவரை நிச்சயம் பாட வைக்காமல் விட மாட்டேன் என்று அனிருத் தெரிவித்திருந்தார்.

விஜய்

கத்தி படத்தில் விஜய் பாடும் பாடலுக்கு டியூனை போட்டுவிட்டு அவருக்காக காத்திருந்தார் அனிருத். விஜய் விரைவில் ஸ்டுடியோவுக்கு வந்து பாடுவார் என்று அனிருத் ட்வீட் செய்திருந்தார்.

செல்ஃபி புள்ள

விஜய் அனிருத் இசையமைத்து வைத்திருந்த செல்ஃபி புள்ள பாடலை பாடி கொடுத்துள்ளார்.

செல்ஃபி எடுப்போம்ல?

பாட்டு பாட வந்த விஜய்யுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அனிருத்.

Read more about: kaththi, vijay, anirudh, கத்தி, விஜய், அனிருத்
English summary
Anirudh has finally made Vijay to croon Selfiepulla for Kaththi.

Tamil Photos

Go to : More Photos