» 

இது கதிர்வேலன் காதலிக்கு யு சான்று!

Posted by:
 

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படத்துக்கு சென்சார் யு சான்று வழங்கியுள்ளது.

காதலர் தின ஸ்பெஷலாக திரைக்கு வரும் இந்தப் படத்தில் உதயநிதி - நயன்தாராவுடன், முக்கிய வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

எஸ் ஆர் பிரபாகரன்

இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. சுந்தரபாண்டியன் என்ற வெற்றிப் படம் தந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

சந்தானம்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே இப்படத்திலும் உதயநிதிக்கு சமமான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வழக்கம்போல் இப்படத்தின் பாடல்களும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் உதயநிதி தீவிர அனுமார் பக்தனாக நடித்துள்ளார்.

சென்சார்

இந்த படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சந்தானம் - உதயநிதி காமெடியை ரசித்து வாய்விட்டு சிரித்தார்களாம்.

'இரண்டாவது படம்'

தமிழ் சினிமா சென்டிமென்ட்படி இரண்டாவது படம் ஜெயிப்பது மிக முக்கியம். ‘சுந்தரபாண்டியன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் இரண்டாவது படம் இது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இரண்டாவது படம் இது, இருவருக்குமே இந்த படம் மிக மிக முக்கியம்!

Read more about: idhu kathirvelan kadhal, உதயநிதி, இது கதிர்வேலன் காதல், சென்சார், udhayanidhi
English summary
Censor board officials gave a clean U certificate for Udhayanidhi- Nayanthara starrer Ithu Kathirvelan Kadhali.

Tamil Photos

Go to : More Photos