» 

காதலர் தின ஸ்பெஷலாக 320 அரங்குகளில் வெளியாகும் இது கதிர்வேலன் காதல்!

Posted by:

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இன்று 320 அரங்குகளில் வெளியாகிறது உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படம்.

உதயநிதி-நயன்தாரா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது.

idhu kathirvelan kadhal

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இரண்டாவது படம் இது.

நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான 'ஆரம்பம்', 'ராஜா ராணி' படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்' படம் வருகிறது.

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. கிட்டதட்ட 320 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம், ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Read more about: idhu kathirvelan kadhal, valentine day, இது கதிர்வேலன் காதல், காதலர் தினம்
English summary
Udhayanidhi Stalin, Nayanthara's Ithu Kathirvelan Kadhal is releasing today in 320 theaters across the state.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos