» 

என்ன சத்தம் இந்த நேரம்- அட ஜெயம் ராஜாவும் நடிக்கிறார்!

Posted by:
 

என்ன சத்தம் இந்த நேரம் படத்தின் மூலம் இயக்குநர் ஜெயம் ராஜாவும் நடிகராகக் களமிறங்குகிறார் .

பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்கும் முதல் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

கமல் பாட்டு இது...

கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்து இளையராஜா இசையமைப்பில் வெளியான புகழ்பெற்ற என்ன சத்தம் இந்த நேரம்... என்ற பாடலின் முதல் வரியையே படத்துக்கு சூட்டியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் விலங்கியல் பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளன.

 

நிதின் சத்யா

உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போவதுதான் கதை. காணாமல் போன சகோதரிகளை ஒரு நாள் முழுவதும் தேடிக் கண்டு பிடிக்கும் வேடத்தில் நடித்துள்ளவர் நிதின் சத்யா.

இது ஒரு மிகவும் சவாலான கதை என்பதால் இயக்குனரும், தயாரிப்பாளர் அனூப்பும் இந்தக் கதையை நன்கு திட்டமிட்டபின்னரே களத்தில் இறங்கினார்களாம். அதுபோல்,ஒன்றாகப் பிறந்த நான்கு பேர் திரைப்படத்தில் நடிப்பதும் புதிய முயற்சி என்கிறார் இயக்குநர் குரு ரமேஷ்.

 

நிஜ உயிரியல் பூங்காக்களில்...

குரு ரமேஷ் மேலும் கூறுகையில், "இந்தப் படத்தின் 95 சதவிகிதப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் நடந்தது.

இதன் சில பகுதிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு நடத்திய முதல் குழுவினர் நாங்கள்தான் என்று அங்கிருந்த ஊழியர்கள் கூறினார்கள். தலக்கோணம் நீர்வீழ்ச்சியிலும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன," என்றார்.

 

லிம்கா சாதனைப் புத்தகத்தில்...

சில சிறப்பம்சங்களுக்காக இந்தப் படத்தினை லிம்கா சாதனை புத்தகத்திற்கும் அனுப்பியுள்ளோம் என்று நடிகர் நிதின் சத்யா தெரிவித்தார்.

ஜெயம் ராஜா

இந்தப் படத்தின் முக்கிய விஷயம் முன்னணி இயக்குநர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

Read more about: jayam raja, enna satham intha neram, என்ன சத்தம் இந்த நேரம், ஜெயம் ராஜா
English summary
Director Jayam Raja is going to make his debut as actor in a movie titled Enna Satham Intha Neram.

Tamil Photos

Go to : More Photos