»   »  தமிழின் முதல் 'ஸோம்பி' படமாக உருவாகும் மிருதன்!

தமிழின் முதல் 'ஸோம்பி' படமாக உருவாகும் மிருதன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் என்ற எதிர்பார்ப்புடன் தயாராகி வருகிறது ஜெயம் ரவியின் மிருதன் திரைப்படம்.

ஹாலிவுட் சினிமாவில் ஸோம்பி கதை என்ற வகை உண்டு. ஸோம்பிகள் மிகவும் கொடூரமானவர்களாக இருப்பார்கள். மனிதர்களை ரேபிஸ் போன்ற ஒரு வித கொடிய வைரஸ் தாக்குவதன் மூலம் அவர்கள் ஸோம்பியாக மாறுவார்கள்.


இறந்தாலும் அவர்களது உடல் நடமாடிக் கொண்டிருக்கும். எதைச் சொன்னாலும் செய்வார்கள்.


ஸோம்பி...

ஒரு ஸோம்பி மனிதன் இன்னொருவரை கடித்துவிட்டால் அவரும் ஸோம்பியாக மாறிவிடுவார். பசித்தால் ஒருவரை ஒருவர் கடித்து திண்பார்கள். இதுதான் ஸோம்பி படங்களின் அடிப்படை.


முதல் படம்...

இது ஒரு சினிமா கற்பனை தான் என்றாலும், ஸோம்பியை வைத்து இதுவரை ஹாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வந்திருக்கிறது. 1968ம் ஆண்டு வெளிவந்த நைட் ஆஃப் தி லிவ்விங் படம்தான் முதல் ஸோம்பி படம்.


மிருதன்...

இந்நிலையில் தமிழில் முதல் ஸோம்பி படம் என்ற சிறப்புடன் தயாராகிறது மிருதன். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், லட்சுமிமேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.


3வது படம்...

சக்தி சௌந்தர்ராஜன் ஏற்கனவே நாணயம், நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இது அவரது மூன்றாவது தமிழ்ப்படம்.


ஜெயம் ரவி...

இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஸோம்பிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் வீரனாக நடித்திருக்கிறாராம். லட்சுமி மேனனுக்கு டாக்டர் வேடம்.


300க்கும் மேற்பட்ட ஸோம்பிக்கள்...

ஹாலிவுட் பாணி கதையாக இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து படமாக்கி இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் ஸோம்பி மனிதர்களாக நடிக்கிறார்கள்.


மேக்கப்...

இவர்கள் அனைவருக்கும் இரவு 12 மணிக்கே மேக்கப் போட்டு முடித்தால் மட்டுமே, காலையில் ஷூட்டிங் நடத்த முடியுமாம். இதற்கான பிரத்யேகமாக மேக்கப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


ஜெயம்...

மிருதன் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளதாம். ஒன்று ஜெயிப்பவன் அல்லது ஜெயம் என்று பொருளாம். மற்றொன்று ஸோம்பி ஆகும். ஸோம்பியின் சரியான தமிழ் வாழ்த்தை மிருதன் எனக் கூறியது மதன் கார்க்கி தானாம்.


மிருதன் வெற்றி பெற்றால் பேய்ப் படங்களைப் போலவே தமிழில் அடுத்தடுத்து ஸோம்பி திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.


 


English summary
After the grand success of Thani Oruvan, Jayam Ravi is back with yet another interesting film called Miruthan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos