twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளியில் போக முடியாமல் தவித்தேன்... "கககபோ" சுப்பு பஞ்சு!

    By Soundharya
    |

    க.க.க.போ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளியன்று காலை கமலா திரை அரங்கில் நடைபெற்றது. ஆடியோவை அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன் வெளியீட க.க.க.போ படத்தின் தயாரிப்பாளர் செல்வி சங்கர் உள்ளிட்ட க க க போ படக்குழுவினர் பெற்றுக் கொன்டனர்.

    விழாவில் அன்பு பிக்சர்ஸ் அன்பழகன், பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், ஆதவன், சாக்க்ஷி அகர்வால், இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் செல்வி சங்கர், சங்கர் இசைமைப்பாளர்கள் பி.சி. சிவம், சி. வி. அமரா, இயக்குனர் கேபிள் சங்கர், விஜய் ஆதிராஜ், உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களுடன் இப்படத்தை வெளியிடும் தேவர் பிளம்ஸ்-ன் சி.எ. பாரதி ஐய்யப்பன் கலந்து கொண்டார்.

    இந்தப்படம் முழுக்க முழுக்க, ரோபோ ஷங்கர், ஆதவன், எம் எஸ் பாஸ்கர், கருணாஸ், மதன் பாபு, மயில்சாமி மற்றும் தமிழ் திரைத்துறையின் நகைச்சுவை பட்டாளமே இணைந்து கலக்கியிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை பட்டாளங்களின் கலக்கலில் உருவாகியிருக்கும் இப்படத்தின் தலைப்பு கூட காமெடி கிங் வடிவேலுவின் வசனமாகும். கககபோ...... இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியது பின்வருமாறு..

    நடிகர் சுப்பு பஞ்சு :

    நடிகர் சுப்பு பஞ்சு :

    இப்படத்திற்காக நான் பெண் வேடத்தில் நடிப்பதற்காக மீசை மட்டுமல்லாது கண் புருவத்தையும் வழித்துக்கொண்டு ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாமல் தவித்தேன் ஆனாலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதை ஏற்று நடித்தேன். உண்மையாகவே இது மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.

    பவர் ஸ்டார் சீனிவாசன் :

    பவர் ஸ்டார் சீனிவாசன் :

    இப்படத்தில் எனக்காகவே ஒரு பாடல் காட்சி கொடுக்கப்பட்டது அது எனது நிஜ கேரக்டரை சொல்லும் விதமாக இருந்தது. கோர்ட்டுக்கும் எனக்கும் நிஜ வாழ்க்கையில் தொடர்பு உண்டு. அதேபோல இதிலும் காட்சி வந்தது. இதில் நான் மூன்று பெண்களுக்கு கணவன்.

    இயக்குனர் விஜய் :

    இயக்குனர் விஜய் :

    நிறைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து படமாக்கினேன். அவர்கள் அனைவரும் என்னை புதுமுக இயக்குனர் என்று கூட பார்க்காமல் என்னுடன் அன்பாக நடந்துகொண்டார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை தயாரித்த செல்வி சங்கர், சங்கர் அவர்களுக்கு மிகவும் நன்றி மேலும் கதாநாயகி இணை இயக்குனர் போல் பணியாற்றினார் எனவும் இப்படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ். என்போன்று புதுமுக இயக்குனருக்கு மிகவும் உதவுகிறது.

    தயாரிப்பாளர் சங்கர் :

    தயாரிப்பாளர் சங்கர் :

    நான் மலேசியாவில் இருந்து வந்த தமிழன் என்கிறார்கள். ஆனால் நான் திருநெல்வேலியில் இருந்து மலேசியா சென்ற தமிழன்.. நான் இப்படத்தை என் மனைவி செல்விக்காக தயாரித்தேன். இதுபோன்று தமிழில் நிறைய திரைப்படங்களை தயாரிக்க போகிறேன். என்னை இப்படத்திற்கு கொண்டுவந்தவர் இயக்குனர் விஜய்தான். நான் தயாரிப்பாளன் என்ற முறையில் அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன் அவரும் இப்படத்தை நன்றாக முடித்து கொடுத்தார். இப்படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ் குழுமத்திற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.

    அன்பழகன் :

    அன்பழகன் :

    இது போன்று சிறிய படங்கள் நிறைய வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். அன்பு பிக்சர்ஸ் ஐயப்பன் அவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நீண்டகால நண்பர், சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வந்த தலைவா படம் அன்று வெளிவர முடியாமால் சிக்கலில் இருந்தது. அப்பொழுது நானும் ஐயப்பன் அவர்களும் இப்படத்தை வாங்கி 300 திரை அரங்களில் வெளியிட்டோம். இது போன்று பெரிய படங்களே வெளிவர முடியாமல் இருக்கும்பொழுது சிறிய படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றன. எனவே நான் நிறைய சிறிய படங்களை வெளியீட முடிவு செய்திருக்கிறேன். இப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் அவர்களுக்ககும், தயாரிப்பாளர் செல்வி சங்கர், சங்கர் அவர்களுக்கும், இப்படத்தை வெளியீடும் ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.

    English summary
    kakakapo movie's audio launch function in kamala Theater. lot of celebrities are attended that function and gave their special address.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X