twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி ரெண்டாம் பாகம் வருமா? அமெரிக்காவில் கபாலி பார்த்த அனுபவம்!

    By Shankar
    |

    டல்லாஸ்(யு.எஸ்): பன்னிரண்டு வருட அமெரிக்க வாழ்க்கையில், இது வரையிலும் வந்த அனைத்து ரஜினி படங்களையும் முதல் பார்த்த அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் கபாலியின் அனுபவம் சற்று வித்தியாசமானது தான்.

    நண்பர்கள் புடைசூழ திருவிழாக் கோலமாக தியேட்டருக்குள் வந்தாச்சு..மலேசிய அறிமுகம், ரஜினி அறிமுகம், மெல்லிய சோக இழையோடும் அவருடைய தேடுதல்கள், உடன் ஆத்மார்த்தமான நண்பர்கள் படை, ஊரே கொண்டாடும் டான் என ஆரம்பித்து பலப் பலத் திருப்பங்களுடன் இடைவேளையும் வந்து விட்டது,

    இடைவேளைக் காட்சி திருப்பமாக இருந்தாலும், அது ஒரு பெரிய மாற்றமாக இருக்காது என்பதைக் கணிக்க முடிந்தது. ஆனாலும் அதை வெகு இயல்பாக சட்டென்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுவிட்டார் இயக்குனர்.

    Kabali, an US viewers experience

    மனைவியைத் தேடிச்செல்லும் ஒவ்வொரு காட்சியிலும் , இது வேறு படமோ என்னும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட பரிமாணம். மனைவியைப் பிரிந்து வேறு ஊர்களில் வேலை பார்க்கும் கணவன்மார்களைச் சிந்திக்க வைக்கும்.

    மனைவியைக் கண்டவுடன் வரும் வேகம், ரஜினிக்கே உரித்தானது.. க்ளைமாக்ஸ் காட்சியும் முடிந்து வெளியே வந்த பிறகு என்னவென்று சொல்லத் தெரியாத உணர்வு. சுற்றிலும் அமைதியான சூழல், எல்லோருக்கும் அதே உணர்வாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

    பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் தான், ஒவ்வொரு காட்சியாக மீண்டும் மனத்திரையில் விரிய ஆரம்பித்தது. தாடியில்லாமல் இளமையாக வரும் ரஜினிக்குத்தான் அனைத்திலும் முதலிடம் என்று சொல்லலாம். அந்த பழைய ரஜினி - சான்ஸே இல்லை.. மீண்டும் 80 களுக்கு அழைத்துச் செல்கிறார்.

    வெள்ளைத் தாடியுடன் வரும் ரஜினி அன்னியமாக தெரிகிறார். ஏதோ புதுமுக நடிகரோ என்று தான் தோன்றுகிறது. திரையில் இதுவரையிலும் பார்க்காத ஒரிஜினல் ரஜினி அல்லவா ?

    திரையில் வரும் ரஜினிக்கும் இயல்பான ரஜினிக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருந்த தூரத்தை ஒரே கேரக்டரில் மாற்றிவிட்டார் இயக்குனர் ரஞ்சித்.

    அப்பா மகளுக்குமான காட்சிகள், பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு நிச்சயம் மகளை உச்சி மோர்ந்து பார்க்கச் செய்யும்.

    நடிப்பில் இரண்டாமிடம் யாருக்கு என்பதில் ராதிகா ஆப்தேவுக்கும் தன்ஷிகாவும் சரியான போட்டி, இருவருக்கும் தான் சளைத்தவரில்லை என்று ரித்விகாவும் அவ்வப்போது முந்துகிறார்.

    முதலிடம் வேறு யாருக்கு ரஜினிக்குத் தானே1. 80 களின் ரஜினியிடம் இருந்த அதே வேகத்தை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்.

    கலையரசன், தினேஷ், ஜான் விஜய் என்று எல்லாருமே ரஜினியுடன் முதல் படம்.. ஆனால் அப்படி தெரியவே இல்லை.. முன்னதாக ரஜினியுடன் நடித்த ஒரே ஒரு நடிகர் மட்டுமே இந்த படத்தில் உள்ளார். யாரென்று தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒரேயடியாக தாடி ரஜினியைக் காட்டினால் மக்கள் சோர்ந்துவிடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ, ப்ளாஷ்பேக் காட்சிகளை அவ்வப்போது வரிசையாக தூவிச் சென்றுள்ளார் இயக்குநர்.

    ரஜினி இல்லாத காட்சியில் கூட அவருடைய இளைமையான தோற்றத்தை மனக் கண்ணில் காட்டுகிறார்

    கேங்க்ஸ்டர் படத்திற்கு தேவையான இசையை 'மகிழ்ச்சி' நாராயணன் வழங்கியுள்ளார்.

    பாடல்கள் படத்தோடு இயல்பாகப் பயணிக்கின்றன..ரஜினியின் ஒப்பனிங் டான்ஸ் , டூயட் இல்லாமல் பாடல்கள்.. நம்ப முடியவில்லை.. காமிராவுக்குச் சொந்தக்காரரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை சார்ந்த படம் என்பதால், மலேசிய தமிழர்கள் பற்றிய ஆவணப் படங்கள், பேட்டிகளை தேடிப்பிடித்து பார்த்தது, கதையோட்டத்தின் நம்பகத்தன்மையைக் கூறியது.

    தேயிலைத் தோட்டங்கள், தோட்டங்களிலிருந்து வெளியேறி நகர்ப்புறத்திற்கு குடியேறிய இளைஞர்களின் வாழ்க்கை என அனைத்தையும் முன்னமே கொஞ்சம் தெரிந்திருந்ததால், கதையோட்டம் இயல்பாக இருந்தது. எங்கே செல்லும் இந்த பாதை என்ற அவர்களின் வாழ்க்கை சோகத்தையும் உணர்த்தத் தவரவில்லை..

    கடைசியில் ரஜினி ஏன் இதை எல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள் என்று இளைஞர்களைப் பார்த்துக் கேட்பார். அந்த இளைஞர்கள் கூறிய அனைத்தையும் பேராசிரியர் ஒருவரின் பேட்டியில் காண முடிந்தது.

    க்ளைமாக்ஸின் அர்த்தம் என்ன? கபாலி இரண்டாம் பாகம் வருமா அல்லது இயக்குநரின் டச் ஆ?

    எதுவாக இருந்தாலும் கனத்த மனதோடு தியேட்டரிலிருந்து வெளியே வருவது உண்மை.

    படத்தில் குறைகளே இல்லையா ? திருவிழாவில் யாராவது குறை காணமுடியுமா என்ன? ' கபாலி' உலகத் தமிழர்களின் திருவிழாங்க!

    - டல்லாஸிலிருந்து இர தினகர்.

    English summary
    Here is the Review of an US viewer on Rajiniknth's magnum opus Kabali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X