»   »  கபாலி மேக்கிங் வீடியோ... ஒரு நிமிட ரஜினி மாஜிக்!

கபாலி மேக்கிங் வீடியோ... ஒரு நிமிட ரஜினி மாஜிக்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் ஒரு நிமிட மேக்கிங் வீடியோவை நேற்று இரவு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார்.

இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்ட அந்த வீடியோவை இன்று காலைக்குள் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.இந்த வீடியோவில் ரஜினி நடிக்கும் ஒரு ஆக்ஷன் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ரஜினியின் வேகமும் ஸ்டைலும், அவருக்கே உரித்தான அந்த அதிவேக நடையும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கிறது.


இந்த வயதில், இத்தனை வசீகரமாக, ஸ்டைலாக, வேகமாக நடிக்கக் கூடிய ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருக்க முடியும். அப்படி ஒரு மாஜிக் அவரது நடிப்பில் தெரிகிறது.


நாளை மறுநாள் உலகெங்கும் கபாலி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு முதல் வாரம் முழுக்க எங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்தப் படத்தின் பெரும்பாலான ஷோக்களை கார்ப்பொரேட் நிறுவனங்கள் கைப்பற்றிவிட்டதால், வழக்கமாக முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் தவிக்கின்றனர்.


இந்த மேக்கிங் வீடியோ பார்த்த பிறகு, 'தலைவா... எப்படியாவது உங்களை திரையில் பார்த்தாக வேண்டும்... வழி தெரியலையே' என்று சமூக வலைத் தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.


English summary
The one minute making video of Rajinikanth's Kabali has been released on Tuesday night and the same goes viral online.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos