»   »  இணையத்தை அதிர வைத்த கபாலி புதிய போஸ்டர்!

இணையத்தை அதிர வைத்த கபாலி புதிய போஸ்டர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு இணையத்தில் வெளியாகிறது.

Select City
Buy Kabali (U) Tickets

இந்த நிகழ்வையொட்டி ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட, இணையத்தின் இன்றைய விசேஷமாகிவிட்டது அந்த போஸ்டர். சமூக வலைத்தளங்களில் வைரலாகி கலக்கி வருகிறது.


உழைப்பாளர் தின ஸ்பெஷல்

உழைப்பாளர் தின ஸ்பெஷல்

உழைப்பாளர் தின ஸ்பெஷலாக நாளை காலை 11 மணிக்கு கபாலி டீசர் வெளியாகிறது. உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அனைவரும் விழித்திருக்கக் கூடிய நேரமாக காலை 11 மணியைத் தேர்வு செய்துள்ளதாக தாணு நேற்று தெரிவித்திருந்தார்.


புதிய போஸ்டர்

புதிய போஸ்டர்

இந்த டீசர் வெளியீட்டுக்கு முன்னோட்டமாக ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் தாணு. அதாவது முன்னோட்டப் படத்துக்கே ஒரு முன்னோட்டம்.
ரஜினி லுக்

ரஜினி லுக்

இந்த டீசரில் தாடி, கறுப்பு - வெள்ளை முடியுடன் ஒரு துப்பாக்கியை ஸ்டைலாக ஏந்தியபடி காட்சி தருகிறார் ரஜினி. இந்த போஸ்டர் இன்று பிற்பகல் 2.51-க்கு வெளியானது.


வைரலானது

வைரலானது

வெளியான அடுத்த சில நிமிடங்களில் இணைய வெளியில் வைரலானது. ட்விட்டர், பேஸ்புக்கில் ட்ரெண்டிங்கானது. வாட்ஸ் ஆப் குழுக்கள் பெரும்பாலும் இந்தப் படத்தை முகப்புப் படமாக வைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது.


English summary
Rajinikanth's Kabali new poster for Teaser launch is rounding viral in cyber space.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos