»   »  கபாலி வெளிநாட்டு உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனை?

கபாலி வெளிநாட்டு உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனை?

Posted by:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனயாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் இந்திய சினிமா வர்த்தகத்தில் இது ஒரு புதிய சாதனை ஆகும்.

Select City
Buy Kabali (U) Tickets

ரஜினி நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘கபாலி'. இப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினியின் வித்தியாசமான தோற்றம், புதிய படக் குழு போன்றவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரூ 30 கோடிக்கு விற்பனை?

ரூ 30 கோடிக்கு விற்பனை?

இவ்வளவு எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

ஏற்கெனவே அமெரிக்காவில் இந்தப் படத்தின் விற்பனை உரிமை ரூ 8.5 கோடிக்குப் போனதாக தயாரிப்பாளர் தாணுவே அறிவித்திருந்தார்.


சாதனை

சாதனை

இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இப்படத்தின் வெளிநாட்டு உரிமை இவ்வளவு தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக வெளியான தகவல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


டீசர்

டீசர்

இதுவரை இந்தப் படத்தின் மூன்று ஸ்டில்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு அன்று ட்ரைலர் அல்லது டீசர் வெளியாகும் என்றார்கள். ஆனால் வெளியாகவில்லை.


English summary
According to sources the overseas rights of Rajinikanth's Kabali has been sold out for Rs 30 cr.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos