»   »  என்னென்ன சாதனைகளை படைத்துள்ளார் நம்ம 'கபாலி'? இதோ ஒரு லிஸ்ட்!

என்னென்ன சாதனைகளை படைத்துள்ளார் நம்ம 'கபாலி'? இதோ ஒரு லிஸ்ட்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமாவில் இதுவரையிலான அத்தனை சாதனைகளையும் முறியடித்து வெற்றிநடை போடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி. நேற்று வரையில் என்னன்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் இதோ...

Select City
Buy Kabali (U) Tickets

இந்தியாவிலேயே பெரிய ஓப்பனிங்


இன்னும் துல்லியமான வசூல் நிலவரம் வரவில்லை. ஆனால் முதல் நாள் இந்திய வசூல் ரூ 60 கோடிக்கு மேல் என்கிறார்கள். இந்த வகையில் இதற்கு முந்தைய ரெக்கார்டு பாகுபலி. 42.5 கோடிதான் முதல் நாள் வசூல். அதனை நொறுக்கித் தள்ளிவிட்டார் ரஜினி, கபாலி மூலம்.


வார இறுதி கலெக்‌ஷன்

வார இறுதி கலெக்‌ஷன்

ரிலீஸான முதல் வார இறுதி கலெக்‌ஷன் தான் ஒரு படத்துக்கு மிக முக்கியம். வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு கலெக்‌ஷன்தான் வார இறுதி கலெக்‌ஷன். அமீர்கான், அபிஷேக் பச்சன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான தூம்3 தான் அதில் நம்பர் ஒன்னாக இருந்தது. 10.3 மில்லியன் டாலருடன் முதல் இடத்தில் இருந்த தூம்3 யை 16 மில்லியன் குவித்து பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு சென்றுள்ளது கபாலி.


ரிலீஸுக்கு முந்தைய வசூலில் நம்பர் ஒன்

ரிலீஸுக்கு முந்தைய வசூலில் நம்பர் ஒன்

ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங், விநியோக உரிமை, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலம் வருமானம் பார்த்துவிடும். அந்த வகையில் ரிலீஸுக்கு முன்பே கபாலி 225 கோடி ஈட்டியுள்ளது. இதற்கு முன்பு பாகுபலிக்கு 162 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது.
யுஎஸ் கனடா பிரீமியர் ஷோ சாதனை

யுஎஸ் கனடா பிரீமியர் ஷோ சாதனை

அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கனடாவிலும் திரையிடப்படும் ப்ரீமியர் ஷோ எனும் சிறப்புக் காட்சி வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு 2 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது கபாலி. இதற்கு முந்தைய சாதனை பாகுபலி. 1.4 மில்லியன் டாலர்ஸ்.


அதிகபட்ச ஓப்பனிங்

அதிகபட்ச ஓப்பனிங்

தமிழ் படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் சாதனையை இதுவரை வேதாளம் கையில் வைத்திருந்தது. வேதாளம் படத்தின் ஓப்பனிங் 15 கோடி. ஆனால் கபாலி படத்தின் ஓப்பனிங் 24.5 கோடி. இனியும் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு கபாலி நம்பர் ஒன் இடத்துக்குச் சென்றிருக்கிறார்.


தென் இந்திய மொழிகளில் நம்பர் ஒன் தமிழ் படம்

தென் இந்திய மொழிகளில் நம்பர் ஒன் தமிழ் படம்

தமிழைத் தவிர மற்ற தென் இந்திய மொழிகளான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா நான்கு மாநிலங்களில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஆனது கபாலிக்குத்தான். தென் மாநிலங்களில் முதல் நாளிலேயே ரூ 26 கோடிகளை அள்ளியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணக்கு போட்டாலும் அந்தந்த மாநிலங்களில் நம்பர் ஒன் படம் கபாலியாகத் தான் இருக்கிறது.
வட மாநிலங்களில் நம்பர் ஒன்

வட மாநிலங்களில் நம்பர் ஒன்

வட மாநிலங்களில் வெளியான தென்னிந்திய படங்களில் இதுவரை நம்பர் ஒன் கலெக்‌ஷனாக இருந்தது பாகுபலி. 5.15 கோடி வசூல். கபாலியின் வசூல் ரூ 5.8 கோடி. இந்த சாதனையும் கபாலிவசம் தான்.


வெளிநாட்டு வசூலிலும் தலைவர்தான் டாப்

வெளிநாட்டு வசூலிலும் தலைவர்தான் டாப்

வெளிநாடுகளில் அதிகபட்சமாக வசூல் குவித்த படமாக சல்மான் கானின் சுல்தான் இருந்தது. 23 நாட்களில் 153 கோடி ரூபாய். ஆனால் கபாலி அதை வெறும் ஆறே நாட்களில் முந்திவிட்டது. கபாலியின் மொத்த வெளிநாட்டு வசூல் ரூ 169 கோடி.


முதல் பத்தாயிரம் ஸ்க்ரீன்

முதல் பத்தாயிரம் ஸ்க்ரீன்

பாகுபலிதான் அதிகபட்சமாக நாலாயிரம் திரையரங்குகளில் ரிலீஸானது. ஆனால் யாருமே நெருங்காத வகையில் கபாலி 6500 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கையை 10000 என்று செய்தி வெளியிட்டனர். சீனாவில் வெளியாகியிருந்தால் இந்த எண்ணிக்கை சாத்தியமாகியிருக்கும்.


நாம் சொல்லியிருக்கும் கலெஷன் சாதனை எல்லாம் நேற்று முன் தின நிலவரம்தான். எனவே இந்த சாதனைப் பட்டியலில் இன்னும் பல சாதனைகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எது எப்படியோ கிரிக்கெட்டுக்கு சச்சின் போல சினிமாவுக்கு ரஜினி. அவரது கபாலி சாதனைகளை இனி அவரது 2.ஓ தகர்த்தால்தான் உண்டு. வேறு யாராலும் அது சாத்தியமில்லை என்பதே உண்மை!English summary
Here is the list of Rajini's Kabali records in Box Office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos