»   »  1 மில்லியனைத் தொட்ட கபாலி நெருப்புடா டீசர்!

1 மில்லியனைத் தொட்ட கபாலி நெருப்புடா டீசர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் இரண்டாவது டீசரும் சாதனைப் படைக்க ஆரம்பித்துள்ளது.

வெளியான சில மணி நேரங்களில் இந்த டீசர் 1 மில்லியனைத் தாண்டியது.


உலக சாதனை செய்த முதல் டீசர்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தின் முதல் டீசர் கடந்த மே 1-ம் தேதி வெளியாகி பல சாதனைகள் படைத்தது. இந்த ஒன்றரை மாதங்களில் அந்த டீசருக்கு 22 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. சர்வதேச அளவில் இது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.


கபாலிதான் பேச்சு

இந்த டீசருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, சர்வதேச அளவில் உள்ள சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் கபாலி என்ற தமிழ்ப் படம் குறித்துப் பேச ஆரம்பித்தனர். கபாலி, மகிழ்ச்சி ஆகிய சொற்களை அவர்களும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.


இரண்டாவது டீசர்

கபாலி படத்தின் இரண்டாவது டீசரை நேற்று இரவு 8 மணிக்கு வெளியிட்டது பாடல் உரிமை பெற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம். நெருப்புடா டீசர் என்ற தலைப்பில் வெளியான இந்த குறு முன்னோட்டப் படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தீயாய்ப் பரவியது.


 


 


பெரும் வரவேற்பு

இந்த டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்புடன் காத்திருந்தனர் ரசிகர்கள். முதல் டீசரை வரவேற்க எப்படி தயாரானார்களோ அதே மாதிரி இந்த இரண்டாவது டீசரையும் வரவேற்க லேப்டாப், ஸ்மார்ட் போன்கள் சகிதமாகக் காத்திருந்தார்கள்.


1 மில்லியன்

டீசர் வெளியான 20 நிமிடத்தில் 1 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் 1 மில்லியனைத் தாண்டியது பார்வைகள் எண்ணிக்கை. இப்போது 1.17 மில்லியன் பார்வைகள், 61 ஆயிரம் ப்ளஸ் விருப்பங்களுடன் பரபரவென பரவிக் கொண்டிருக்கிறது கபாலி 2வது டீசர்.


English summary
The second teaser of Rajinikanth's Kabali has viewed more than a million within 12 hours of its release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos