»   »  நெருப்புடா... கபாலிடா... ச்சும்மா ஆன்லைன் உலகமே அதிருதில்ல!

நெருப்புடா... கபாலிடா... ச்சும்மா ஆன்லைன் உலகமே அதிருதில்ல!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கபாலி... உலகெங்கிலும் பல கோடி ரசிகர்கள் தவமிருக்கும் ரஜினி படம் இது. இந்தப் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று வெளியானது.

Select City
Buy Kabali (U) Tickets

வெளியான கையோடு யுட்யூப் இணையதளமே திணறும் அளவுக்கு பார்வையாளர்கள் குவிந்தனர் இந்த டீசருக்கு.


ஒரு நிமிடம் ஏழு நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் ரஜினி இரு வேறு தோற்றங்களில் வருகிறார்.நெருப்புடா.... என்று ஓங்கி ஒலிக்கும் பின்னணி குரலும் வெறியேற்றும் அதிஉச்ச இசையும் ஒலிக்க கோட் சூட் அணிந்த வயதான கபாலி மகா ஸ்டைலாக நடந்து வருகிறார். அடுத்த காட்சியில் 'ஆமா.. நீங்க ஏன்ணே கேங்ஸ்டர் ஆனீங்க?' என்று ஒரு கூட்டத்தில் ஒருவர் கேட்க.. அதற்கு தனக்கே உரிய பாணியில் சிரிப்பை பதிலாகத் தருகிறார் ரஜினி.


அடுத்த காட்சியில் 'யார்றா அந்த கபாலி... கூப்புட்றா அவனை' என்று டான் கிஷோர் எகிற, அப்போது வரும் ரஜினி, "தமிழ்ப் படங்கள்ல மரு வச்சிக்கிட்டு மீசைய முறுக்கிக்கிக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியாரு (அதே மேனரிசம் காட்டி) 'ஏ கபாலி' அப்டீன்னு சொன்ன உடனே, குனிஞ்சி 'சொல்லுங்க எஜமான்' அப்டி வந்து நிப்பானே... அந்த கபாலின்னு நினைச்சியா..." என்று கேட்டு நிறுத்தி... "கபாலிடா..." என்று கம்பீரமாகச் சொல்லிக் காட்டுவார் ரஜினி.


அந்தக் காட்சிக்கு தியேட்டரே கதிகலங்கப் போவது உறுதி.


இந்த டீசரில் ரஜினியின் இளவயதுத் தோற்றமும் சில விநாடிகள் வந்து போகிறது. அது 80களில் மிக இளமைத் துள்ளலுடன் ரஜினி நடித்த அடுத்த வாரிசு போன்ற படங்களை நினைவூட்டுகிறது.


மொத்தத்தில் இந்த கபாலி டீசர், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளதை, டீசர் வெளியான பிறகு குவியும் கமெண்டுகள் மூலம் தெரிகிறது.

English summary
Rajinikanth's Kabali teaser has been released today amidst big expectation.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos