twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி அமெரிக்க உரிமை ரூ 8.5 கோடிக்கு விற்பனை...!- கலைப்புலி தாணு பகிரங்க அறிவிப்பு

    By Shankar
    |

    கபாலி படத்தின் அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.5 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனைப் படைத்திருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

    சோளிங்கர் நகரில் ரஜினி ரசிகர்கள் நடத்திய மலரட்டும் மனிதநேயம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைப்புலி தாணு பேசுகையில், "1978ல் பைரவி படத்தை நான் விநியோகித்தபோது, நாளிதழ் விளம்பரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று விளம்பரம் செய்தேன்.

    Kabali US rights sold out for record price

    அடுத்த நாளே தயாரிப்பாளர் கலைஞானமும் இயக்குநர் பாஸ்கரும் என் அலுவலகத்துக்கு வந்து, 'தனது முன்னோடிகள் எம்ஜிஆரும், சிவாஜியும் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தனக்கு இப்படியொரு பட்டம் தேவையில்லை' என்று ரஜினி கூறுவதாகச் சொன்னார்கள்.

    நான் அடுத்த நாளே கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று விளம்பரம் செய்தேன். அதன் பிறகுதான், ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ஒப்புக் கொண்டார்.

    அவர் மனித நேயத்தின் மறு உருவம். அவரைப் போன்ற மிகச் சிறந்த மனிதரை உலகில் பார்க்க முடியாது. இந்த திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அவர் மட்டும்தான்.

    என் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்தாலும் பரவாயில்லை.. ஒரு உண்மையைச் சொல்கிறேன். ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதுதான் புதிய சாதனை.

    நான் தயாரித்து வரும் மற்ற நடிகர்களின் படங்களின் விற்பனை ரூ 2 கோடியைக் கூட தாண்டாத நிலையில், ரஜினி படம் ரூ 8.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. திரையுலகில் என்றென்றும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்பதற்கு இது ஒன்றே சான்று.

    இந்தப் படம் வெளியான பிறகு, ரஜினி ரசிகர்களுக்காக நானே பெரிய மாநாடு நடத்தப் போகிறேன். இதை ஒரு வாக்குறுதியாகவே உங்களுக்குத் தருகிறேன்," என்றார்.

    English summary
    Kalaipuli Thanu says that his Rajini starrer Kabali's US rights sold out for Rs 8.5 cr.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X