»   »  'கடலை' யாருக்கு கிடைக்கும்? களத்தில் 2 இயக்குநர்கள்

'கடலை' யாருக்கு கிடைக்கும்? களத்தில் 2 இயக்குநர்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு சினிமாவில் கதைக்கு கூட யாரும் பெரிதாக யோசிப்பதில்லை... ஆனால் தலைப்பு வைக்கத்தான் ரூம் போட்டு யோசிக்கின்றனர். ஒரு தலைப்பை அறிவிக்கவே விழா எடுக்கின்றனர். அப்படி வைக்கப்பட்ட தலைப்பிற்கும் ஏதாவது ஒரு சிக்கல் வந்து விடுகிறது.

மாகாபா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு, வேறொரு இயக்குநர் படத்தின் தலைப்புடன் ஒத்துப்போவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மாகாபா ஆனந்த் நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் "தீபாவளி துப்பாக்கி" என்று பெயர் வைத்தனர். பின்னர் அதனை 'கடலை' என்று மாற்றி விட்டனர். இந்த கடலைக்குத்தான் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கடலையால் தனது கடலை போட பொண்ணு வேணும் படத்திற்கு சிக்கல் என்று புகார் வாசிக்கிறார் ஒரு இயக்குநர்.

மாகாபா ஆனந்த்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கால் பத்தித்துள்ளவர் மாகாபா.ஆனந்த். ‘வானவராயன் வல்லவராயன்' படத்தை தொடர்ந்து ‘பஞ்சுமிட்டாய்', ‘அட்டி' என இருபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

 

தலைப்பு மாறியதே

புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமானார். ஐஸ்வர்யா ராஜேஸ் ஜோடியாக நடிக்கும் அந்தப் படத்துக்கு, 'தீபாவளி துப்பாக்கி' என்று பெயர் வைத்தனர். பின்னர் என்ன நினைத்தார்களோ கடலை என்று பெயரை மாற்றினார்கள்.

புகார் சொன்ன இயக்குநர்

ஆனந்த ராஜ் என்ற இயக்குநர், "கடலை போட ஒரு பொண்ணு வேணும்" என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் தனது படத்தின் தலைப்போடு ஒத்துப்போகும், இயக்குநர் சுரேஷின் படத்தலைப்பு குறித்து புகார் அளித்துள்ளார்.

விவசாயம் பற்றிய படம்

விவசாயத்தை பற்றிய படம் என்பதால் இந்த பெயர் வைத்திருப்பதாகவும், "நெல்" என்று பெயர் வைத்தால் படம் சீரியசாக இருக்கும் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதால் 'கடலை' க்கு மாறியதாகவும் இயக்குநர் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

வசூல் அறுவடை

விவசாயத்தை பற்றிய படத்துக்கு நெல் என்று பெயரிட நினைத்து, வசூலில் அறுவடை செய்ய முடியாது என்பதற்காக கடலை என்று பெயரை மாற்றியதாக சுரேஷ் கூறியிருக்கிறார்.

கடலை கிடைக்குமா?

விவசாயத்தை பற்றிய படத்துக்கு எதுக்கு, தீபாவளி துப்பாக்கி என்று பெயர் வைத்தாராம்...? விவசாயத்துக்கும் தீபாவளி துப்பாக்கிக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கின்றனர் சிலர் கடைசியில் 'கடலை' யாருக்கு கிடைக்குமோ?

 

 

English summary
Tamil Movie name issue Kadalai. Makapa Aanadh and Aiswarya Rajesh movie name Kadalai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos