»   »  ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’... ஹீரோ விதார்த் !

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’... ஹீரோ விதார்த் !

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் தனது அடுத்த படத்திற்கு குற்றமே தண்டனை எனப் பெயரிட்டுள்ளார்.

ரிலீசாவதற்கு முன்னமே விருதுகளை அள்ளிக் குவித்த படம் காக்காமுட்டை. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் மழை பொழிந்து வருகிறது.

உலக சினிமா தரத்திற்கு உள்ளது என காக்காமுட்டையைப் பாராட்டி வருகின்றனர் மக்கள். எனவே, மணிகண்டனின் அடுத்த படம் குறித்து தற்போதே ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

குற்றமே தண்டனை...

இந்த சூழ்நிலையில் வெற்றியின் களிப்பிலேயே அடுத்தப் படத்தையும் முடித்து விட்டாராம் இயக்குநர் மணிகண்டன். தனது அடுத்த படத்திற்கு குற்றமே தண்டனை என அவர் பெயர் வைத்துள்ளார்.

கொலைக்களம்...

ஒரு கொலையும், அது சார்ந்த சம்பவங்களும் தான் படத்தின் கதைக்களமாம். ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை எழுதப் பட்டுள்ளது.

விதார்த்...

இப்படத்தில் மைனா புகழ் விதார்த் நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் காக்காமுட்டைக்கு நேரெதிரானதாக கொண்டு மணிகண்டன் சினிமா எடுத்திருக்கிறாராம்.

நேரெதிர் கதைக்களம்...

காக்கா முட்டையின் தாக்கத்தை அடுத்த படத்திலும் மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால் வித்தியாசமாக இந்தக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறுகிறார் மணிகண்டன்.

சின்னச் சின்ன ஆசை...

அதோடு, கடைசி வரை ஒரு பிலிம் மேக்கராக வேறு வேறு ஜானர்களில் படம் பண்ண வேண்டும் என்பது தான் மணிகண்டனின் ஆசையாம்.

எல்லாமே காக்கா முட்டை தான்...

வாழ்த்துக்கள் பாஸ்... நல்ல படங்கள் பார்க்க நாங்களும் தயாரா இருக்கோம்!

 

 

English summary
Kakka muttai Director Manikandan's next film is Kutrame thandanai in which actor Vidharth is playing the lead role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos