» 

அதெல்லாம் ஒரு பொதுக்குழுவா... நாங்கதான் உண்மையான தயாரிப்பாளர் சங்கம் - கலைப்புலி தாணு

Posted by:
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க:
        ஷேர் செய்ய         ட்வீட் செய்ய         ஷேர் செய்ய கருத்துக்கள்     மெயில்

kalaipuli thaanu
சென்னை: பொதுக்குழு என்ற பெயரில் சில தயாரிப்பாளர்கள் சேர்ந்து எங்களை நீக்கிவிட்டதாகக் கூறியிருப்பது செல்லாது. நாங்களே உண்மையான தயாரிப்பாளர் சங்கம். பெப்சியுடன் நாங்கள்தான் பேச்சு நடத்துவோம், என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உடைந்துள்ளது. அதிருப்தி கோஷ்டியினர் சென்னையில் நேற்று போட்டி பொதுக்குழுவை கூட்டி சங்கத்தின் தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாதங்கள் சங்கத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தனர்.

இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான அட்ஹாக் கமிட்டிக்கும் அங்கீகாரம் வழங்கினர்.

ஆனால் இதை எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தங்களை நீக்க இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேன்னப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு விதிமுறைப்படி கூட்டப்படவில்லை. செயற்குழு அனுமதியில்லாமல் கூட்டப்பட்டு உள்ளது. அதில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. எனவே எங்களையும் எஸ்.ஏ.சந்திரசேகரனையும் நீக்கியது செல்லாது.

ஏற்கனவே சங்கத்தின் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து விட்டதாகக் கூறினர். ஆனால் ராஜினாமாவை அவர்கள் வாபஸ் பெற்றுவிட்டனர். அப்புறம் அட்ஹாக் கமிட்டி எங்கே வந்தது.

ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்ட எடிட்டர் மோகன், கோவை தம்பி, தேனப்பன், மனோஜ்குமார், அமுதா துரைராஜ், சங்கிலிமுருகன், பவித்ரன், ராதாரவி, ஆர்.மாதேஷ் கப்பார், சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன் ஆகியோரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை.

எனவே இந்த பொதுக்குழு சட்டத்துக்கு உட்படாதது. அவர்கள் முடிவை பொருட்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். பதவிக்காலம் உள்ளவரை நாங்கள் இருப்போம். நாங்கள் நியமித்த குழுவினர்தான் பெப்சியுடன் சம்பள பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்," என்றனர்.

இதன் மூலம், யாருடன் சம்பளப் பிரச்சினை குறித்து பேசுவது என்ற குழப்பம் பெப்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

Read more about: producer council, தயாரிப்பாளர் சங்கம், கலைப்புலி தாணு, kalaipuli thaanu, fefsi
English summary
Tamil film Producer Council President S A Chandrasekaran, Secretary P L Thenappan, Treasurer Kalaipuli Thaani have ruled out the rebel group's general body meetingand firm in continuing in their respective posts till the end of their tenure.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos