twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கபாலி' கலைப்புலி தாணுவைக் கவுரவித்த மலேசிய அரசு!

    By Shankar
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகி இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை மலேசிய அரசு இன்று கவுரவித்தது.

    இன்று மலேசிய தினம் கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த மலேசிய தின விழாவில் கலைப்புலி தாணுவை மலேசிய அரசின் சார்பில் கவுரவித்தனர். மலேசிய அரசின் சார்பில் தாணுவுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    Kalaipuli Thanu felicitated in Malaysian Day

    இந்த நிகழ்ச்சியில் கபாலியில் நடித்த சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கபாலி படத்தின் பெரும்பகுதியை மலேசியாவின் கோலாலம்பூர், மலாக்காவில் படமாக்கினர். அப்போது மலேசியாவில் ரஜினி சென்ற இடங்களிலெல்லாம் ரஜினியைப் பார்க்க மக்கள் குவிந்தனர்.

    மலேசிய மொழியில் வெளியான முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது கபாலி. மேலும் மலேசியாவில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கபாலியின் தமிழ் பதிப்பு வெளியாகி, ரூ 23 மில்லியன் ரிங்கிட்டுகளைக் குவித்த முதல் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது.

    English summary
    Kabali producer Kalaipuli Thaanu has felicitated by Malaysian govt today with a shield.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X