»   »  ஆமா, கட்டப்பாவை பார்த்து காஷ்மோரா கார்த்தி ஏன் ஷாக் ஆனார் தெரியுமா?

ஆமா, கட்டப்பாவை பார்த்து காஷ்மோரா கார்த்தி ஏன் ஷாக் ஆனார் தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படம் வெளியானபோது கட்டப்பாவின் கெட்டப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள காஷ்மோரா படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் கார்த்தியின் கெட்டப் பாகுபலி கட்டப்பாவை நினைவுபடுத்துகிறது.

இது குறித்து கார்த்தி கூறுகையில்,

ரகசியம்

ரகசியம்

ராஜ்நாயக் கதாபாத்திரத்தின் லுக்கை கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக வைத்திருந்தோம். படத்திற்காக தயாராகவே காலம் எடுத்துவிட்டது. காஷ்மோரா படப்பிடிப்பு துவங்கும் முன்பு நான் கொம்பன் மற்றும் தோழா படங்களில் நடிக்க சென்றுவிட்டேன்.

பாகுபலி

பாகுபலி

நாங்கள் காஷ்மோரா படத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கும்போது பாகுபலி படம் ரிலீஸானது. அதில் சத்யராஜின் கட்டப்பாவின் லுக் ராஜ்நாயக்கின் லுக் போன்றே இருந்ததை பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

மொட்டை லுக்

மொட்டை லுக்

ராஜ்நாயக் கதாபாத்திரத்தின் மொட்டை லுக்கை பல்வேறு லுக்குகளில் இருந்து தேர்வு செய்தோம். ராஜ்நாயக் கட்டப்பா போன்று இல்லாமல் வித்தியாசமாக இருப்பார் என்று தெரிந்ததால் அந்த லுக்கை மாற்றாமல் வைத்துக் கொண்டோம்.

ஜூனியர் கட்டப்பா

ஜூனியர் கட்டப்பா

ராஜ்நாயக் மற்றும் காஷ்மோராவுக்கும், பாகுபலிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது என்னை ஜூனியர் கட்டப்பா என்று அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சத்யராஜ் அங்கிள் எங்கள் குடும்ப நண்பர், சிறந்த நடிகர். அவருடன் என்னை ஒப்பிடுவது பெருமையாக உள்ளது.

மொட்டை

மொட்டை

மொட்டை தலை லுக்கிற்கு நான் போலியாக தலையில் எதையாவது வைக்க விரும்பவில்லை. அதனால் தான் துணிந்து மொட்டை அடித்துவிட்டேன். ராஜ்நாயக் கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டு, டாட்டூ போட்டு, அந்த உடையை அணியவே தினமும் 3 மணிநேரம் ஆனது. 15 கிலோ எடையுள்ள அந்த போர் உடையை அணிந்து சென்னை சூட்டில் நடித்தது லேசு இல்லை. கமல் எப்படி தான் தசாவதாரம் படத்தில் 9 கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டார் என்று வியந்தது உண்டு.

English summary
Karthi was surprised to see Kattappa's look in Baahubali. Know why?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos