» 

தன்னை வைத்து படமெடுக்காவிட்டாலும், தயாரிப்பாளரைப் பாராட்டிய பீட்சா இயக்குநர்!

Posted by:
 

பொதுவாக முதல் படம் பண்ண இயக்குநருக்கும் அதன் தயாரிப்பாளருக்கும் படம் வெளியான பிறகு, நல்ல உறவு நிலைப்பது சினிமாவில் ரொம்ப கஷ்டம்...

அதுவும், முதல் படத்தை தன்னை வைத்து எடுத்துவிட்டு, அடுத்து அதே தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகத்தை வேறு இயக்குநரை வைத்து ஒரு தயாரிப்பாளர் எடுத்தால்...

தன்னை வைத்து படமெடுக்காவிட்டாலும், தயாரிப்பாளரைப் பாராட்டிய பீட்சா இயக்குநர்!

ஆனால் அந்த கோபமோ வருத்தமோ எதுவும் இல்லை பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு.

விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த 'பீட்சா'வை இயக்கியவர். இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் 'பீட்சா' படத்தின் இரண்டாம் பாகத்தை 'பீட்சா-2 தி வில்லா' என்ற பெயரில் படமாக்கி வருகிறது. இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தீபன் சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

படம் வெளியாவதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு கார்த்திக் சுபாராஜ் தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் சி.வி.குமாரின் தயாரிப்பில் வெ ளிவரவிருக்கும் 'பீட்சா-2 தி வில்லா' படம் 'பீட்சா' படத்தை போல் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுபாராஜ் தற்போது சித்தார்த்-லட்சுமிமேனன் நடிப்பில் 'ஜிகர்தண்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Read more about: pizza, பீட்சா
English summary
Karthik Subbaraj, director of blockbuster movie Pizza has wished his producer for the success of its sequel Pizza - The Villa.

Tamil Photos

Go to : More Photos