»   »  சூர்யாவின் மாசு.. கார்த்தியின் காஷ்மோரா ... சில ஒற்றுமைகள்!

சூர்யாவின் மாசு.. கார்த்தியின் காஷ்மோரா ... சில ஒற்றுமைகள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பேய்களின் சீசன் சற்று ஒய்ந்த நிலையில் மீண்டும் அதனை இழுத்து விட்டு, வேடிக்கை பார்க்க வருகிறது கார்த்தியின் காஷ்மோரா திரைப்படம்.

கார்த்தியின் அண்ணன் சூர்யா பேயாக நடித்த மாசு அவருக்கு நன்றாக சறுக்கி விட்டது. ஆனாலும் மனம் தளராமல் காஷ்மோரா படத்தில் பேயாக நடிக்கிறார் கார்த்தி.

ரொம்பவே சரிந்து விட்ட கார்த்தியின் மார்க்கெட் தற்போது தான் சீராகத் தொடங்கி உள்ளது. காஷ்மோரா படத்தின் மூலம் கார்த்தி தனது மார்க்கெட்டை தக்க வைக்கப் போகிறாரா அல்லது இழக்கப் போகிறாரா? தெரியவில்லை.

கிட்டத்தட்ட மாசுதான்

கிட்டத்தட்ட மாசு படத்தின் கதையைப் போலவே காஷ்மோரா படத்தின் கதையும் இருக்கிறது என்று எல்லோருமே, கூறத் தொடங்கி இருக்கின்றனர். நாமும் நம் பங்குக்கு சில ஒற்றுமைகளைப் பார்க்கலாமே.

காஷ்மோராவில் 2 கார்த்தி

காஷ்மோரா படத்தில் 2 வேடங்களில் கார்த்தி நடிக்கிறார், அதில் ஒரு கார்த்தி பேயாக நடிக்கிறார். மாசு படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்து இருந்தார், அதில் ஒரு சூர்யா பேயாக நடித்தார் என்பது நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

பல்கேரியா – கனடா

காஷ்மோரா படத்தின் பாதி படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது, அடுத்த கட்டமாக பல்கேரியா செல்கின்றனர் படக்குழுவினர். மாசு படத்தில் பாதிக் காட்சிகளை சென்னையிலும், மீதிக் காட்சிகளை கனடாவிலும் படமாக்கினார்கள்.

2 ஹீரோயின்கள்

காஷ்மோராவில் நயன்தாரா, மற்றும் ஸ்ரீதிவ்யா இருவரும் நடிக்கின்றனர், இதில் முதன்மைக் கதாபாத்திரம் நயனுக்கு அடுத்த இடம் ஊதா கலர் ரிப்பனுக்கு. மாசு படத்திலும் இதே மாதிரி நயன்தாராவும், பிரணிதாவும் நடித்திருந்தனர்.

மேலும் ஒரு ஒற்றுமை

காஷ்மோரா படத்தில் கார்த்தியின் நாயகி நயன்தாரா, மாசு படத்திலும் சூர்யாவின் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இதெல்லாம் ஒரு ஒற்றுமையான்னு கேட்கக் கூடாது இதுவும் ஒரு ஒற்றுமை தான்.

அப்படீன்னா டிபரன்ஸே இல்லையா

எந்த விதத்தில் மாசு படத்தில் இருந்து காஷ்மோராவை வேறுபடுத்திக் காட்டப் போகிறார் இயக்குநர் கோகுல் என்பது இனிமேல்தான் தெரியவரும்...

English summary
Karthi’s Upcoming Film Kashmora, Directed by Gokul. Nayanthara and Sridivya both heroines played This Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos