twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ஒன்னு சொன்னார், போராட்டக்காரங்க ஒன்னு சொன்னாங்க: தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பம் தீர்ந்தது

    By Siva
    |

    சென்னை: கத்தி விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது.

    விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தின் விளம்பரங்களில் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்தின் பெயரை நீ்க்கிவிடுமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று லைக்காவின் பெயரை நீக்க ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறப்பட்டது.

    Kaththi issue: Theatre owners confused

    இந்நிலையில் கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது. இந்த பிரச்சனை தீர ஆதரவளித்த அம்மாவுக்கு நன்றி என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். ஆனால் பெயரை நீக்க லைக்கா ஒப்புக் கொள்ளவில்லை என தமிழ் அமைப்புகள் தெரிவித்தன.

    இதற்கிடையே கத்தியை ரிலீஸ் செய்ய விடவே மாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார். கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று விஜய் தெரிவித்தது, போராட்டக்காரர்கள் வேறுவிதமாக கூறியது ஆகியவற்றால் என்ன செய்வது என்று தெரியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் தான் கடும் குழப்பத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் லைக்கா நிறுவனம் போராட்டக்காரர்களிடமே கடிதம் அளித்துள்ளதால் பிரச்சனை தீர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் தெளிவடைந்துள்ளனர்.

    English summary
    Theatre owners' confusion gets cleared after Lyca productions issue a letter to the protesters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X