Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இன்று கோவையில் 'கத்தி' வெற்றிக் கொண்டாட்டம்: விஜய், முருகதாஸ் பங்கேற்பு
சென்னை: கத்தி படத்தின் வெற்றிவிழா இன்று கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படம் கத்தி. பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸானது. படம் தமிழகம் தவிர கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தவிர விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்தில் 70 தியேட்டர்களில் கத்தி படம் ரிலீஸானது.
படம் ரிலீஸான முதல்நாளே ரூ.23.8 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது என முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் கத்தி படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் முருகதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கத்தி படத்தை அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இந்தி படம் ஒன்றை எடுக்கிறார் முருகதாஸ். விஜய் சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார்.
கத்தி படம் ஆஸ்திரேலியா, மலேசியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.