»   »  கடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்

கடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனது தந்தையின் மனம் மாறி தன்னை படத்தில் நடிக்க ஓகே சொல்ல வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் தினமும் கடவுளுக்கு தேங்காய் உடைத்தாராம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். சூர்யா, கார்த்தி படங்கள் அவர் வசம் உள்ளது. தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தியின் தாய் மேனகா ஒரு நடிகை, தந்தை சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிப்பு

கீர்த்தி நடிகையாகப் போகிறேன் என்று கூறியதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சினிமா பழைய மாதிரி இல்லம்மா என்று கூறியுள்ளனர். இதை மேனகாவே டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி

தனது தந்தையின் மனம் மாறி தன்னை நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு கீர்த்தி தினமும் தேங்காய் உடைத்தது மேனகாவுக்கு ரொம்ப லேட்டாக தான் தெரிய வந்துள்ளது.

நடிகை

நான் மட்டும் வேறு வீட்டில் மகளாக பிறந்திருந்தால் இந்நேரம் நடிகையாகியிருப்பேன் தெரியுமா சேச்சி என கீர்த்தி தனது சகோதரியிடம் கூறி கவலைப்பட்டாராம்.

பிரியதர்ஷன்

நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த கீர்த்திக்கு பிரியதர்ஷன் தான் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என மேனகா தெரிவித்துள்ளார்.

English summary
Menaka said that her actress daughter Keerthi Suresh used to break coconuts daily so that her father would change his mind and allow her to act.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos