»   »  குடும்பத்தோடு சென்னை வெள்ளத்தில் சிக்கிய ‘ரஜினி முருகன்’ நாயகி கீர்த்தி சுரேஷ்

குடும்பத்தோடு சென்னை வெள்ளத்தில் சிக்கிய ‘ரஜினி முருகன்’ நாயகி கீர்த்தி சுரேஷ்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக்கு ஆலமரம் தெரியுமா, அரச மரம் தெரியுமா.. கிடைத்த வழியெல்லாம் போக மட்டும்தானே தெரியும். அந்த வகையில் சென்னையை வாரிச் சுருட்டிய சமீபத்திய மழை வெள்ளத்தில் சிக்கி சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல விஐபிகளும் கூட தவித்துப் போய் விட்டனர். அப்படிப்பட்டவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர்.

ஸ்ரீதிவ்யாவுக்கு "திரெட்டனிங்" தரும் வகையில் வேகமாக வளர்ந்து வருபவர் மலையாளத்து கீர்த்தி சுரேஷ். அந்தக் காலத்து "ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்" புகழ் மேனகாவின் மகள்.

ரஜினி முருகன், இது என்ன மாயம் ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி சமீபத்தில் சென்னையை மிரட்டிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாராம். நல்லவேளையாக பத்திரமாக மீண்டு வந்து விட்டாராம். அவர் மட்டுமல்ல அவரது பாட்டியும் கூட வெள்ள அபாயத்திலிருந்து மீண்டுள்ளாராம்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள போஸ்ட்டிலிருந்து:

நானும் பாதிக்கப்பட்டேன்...

சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மழை வெள்ளத்தில் நானும் எனது குடும்பத்தினரும் கூட சிக்கிக் கொண்டோம். இதை விவரிக்க வார்த்தையே இல்லை.

பாட்டிக்கு ஆபரேஷன்...

எனது பாட்டிக்கு சென்னை மியாட் மருத்துவனையில் அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தோம். டாக்டர்களும் நாள் குறித்து விட்டனர். இதற்காக பாட்டி, அம்மாவுடன் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தனர். நான் வீட்டில் மற்றவர்களுடன் தங்கியிருந்தேன்.

கனமழை...

அதற்கு முதல் நாளே கன மழை ஆரம்பித்து விட்டது. விடாமல் பெய்த மழையால் நாங்கள் சற்று கவலை அடைந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் அப்போது அது நடந்தது.

வீட்டுக்குள்ளும் புகுந்தது...

ஆம் வீட்டைச் சுற்றி திரண்டு வந்த தண்ணீர் அப்படியே வீட்டுக்குள் புகுந்து விட்டது. வேகமாக நீர்மட்டம் உயரவும் தொடங்கியது.

கரண்டும் இல்லை..

இதையடுத்து ஒவ்வொரு அறையாக ஓடி ஓடி முக்கிமானவற்றையெல்லாம் பத்திரப்படுத்த ஆரம்பித்தோம். ஆளாளுக்கு ஓடினோம். கரண்ட் வேறு இல்லை. இன்வெர்ட்டர் குறைந்து கொண்டே வந்தது.

மாடியில் தஞ்சம்...

முடிந்தவரை முக்கியமானவற்றையும், கொஞ்சம் துணிகளையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினோம். அங்கு இரண்டே மெழுகுவர்த்தி துணையுடன் இரண்டு நாட்களைக் கழித்தோம்.

திகில் அனுபவம்...

தீவு போல இருந்தது அது. இப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டதே இல்லை.

பாட்டி நலம்...

இந்த நிலையில்தான் அமமாவிடம் இருந்து போன் வந்தது. ஆபரேஷன் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். மேலும் பாட்டி நலமாக இருப்பதாகவும் சொன்னார்.

திரும்பி வந்த மூச்சு....

பிறகுதான் எனக்கு மூச்சே வந்தது. அடுத்த நாள்தான் போய் அவர்கள் இருவரையும் நான் பார்க்க முடிந்தது. அதுவரை என்னிடம் எனது உயிர் இல்லை' என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்

English summary
The recent Chennai floods have not spared anyone. People from all walks of life have borne the brunt of Nature's fury. Keerthy Suresh of Idhu Enna Mayam fame has had a terrifying experience in the floods which she has shared in her official Facebook page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos