twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்வீட் போட்டு தானா சிக்கிய பீட்டா: நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்ட குஷ்பு

    By Siva
    |

    சென்னை: தனது ட்வீட்டுக்கு பதில் அளித்த பீட்டா அமைப்பை நடிகை குஷ்பு விளாசியுள்ளார்.

    ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது எல்லாம் பீட்டா அமைப்பின் கண்ணுக்கு தெரியாதே என நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    இதை பார்த்த பீட்டா இந்தியா அமைப்பு ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

    காளைகள்

    @khushsundar காளைகள் தான் துன்புறுத்தப்படுகின்றன. http://petain.vg/2gv. இதனால் தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என பீட்டா ட்வீட்டியுள்ளது.

    ரூபாய் நோட்டு

    ஜல்லிக்கட்டை வேறு எங்காவது உங்களால் தடை செய்ய முடிந்ததா அல்லது மடகாஸ்கர் அரசை அணுகி அவர்களின் ரூபாய் நோட்டில் இருக்கும் சின்னத்தை நீக்க பேச முடிந்ததா என்று தயவு செய்து கூறுங்கள் என குஷ்பு பீட்டாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டால் நன்மைகள் உண்டு. ஒரு காளையை எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் மற்றும் ஒரு விவசாயி காளை அல்லது பசுவை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை நிரூபிக்க நான் லட்சக் கணக்கில் வீடியோக்களை காண்பிக்க முடியும் என்கிறார் குஷ்பு.

    ஆதரவு

    ஜல்லிக்கட்டில் நீங்கள் 5 தவறுகளை பார்த்தால் நாங்கள் ஏன் அதை ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியானவற்றை காண்பிக்க முடியும். விதிமுறைகளை கொண்டு வரலாம்.. நாங்கள் மதிப்போம் ஆனால் தடையை ஏற்க முடியாது என குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

    English summary
    Actress turned politician Khushbu has blasted PETA India on twitter in connection with Jallikattu issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X