»   »  குடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா?

குடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா தான் திடீர் என குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர் நடிகைகள் தொலைக்காட்சி சேனல்களில் நடத்தி வரும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வருகிறார்.

அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீர் என

திடீர் என

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் ஆண்டுக் கணக்கில் நடக்கின்றன. திடீர் என ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். இது உங்களுக்கு முன்பே தோன்றவில்லையா என பலர் ஸ்ரீப்ரியாவிடம் ட்விட்டரில் கேட்டனர். இதையடுத்து அவர் பதில் அளித்துள்ளார்.

ஏன்?

இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிராக நான் ஏன் அண்மை காலமாக குரல் கொடுக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள சில நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள் என ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு

நான் இந்த நிகழ்ச்சிகளை பார்த்தது இல்லை. கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சையை அடுத்தே இந்த நிகழ்ச்சிகளில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பார்த்த உடனே அதிர்ந்துவிட்டேன்.

நிறுத்துவோம்

நான் என் நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக உள்ளேன். நாம் இந்த நிகழ்ச்சிகளை நிறுத்துவோமா?

English summary
Senior actress Sripriya has given explanation as to why she has taken a stand against coiunselling shows of late.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos